Loading Events
  • This event has passed.

     புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியின் முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்கள் இணைந்து உணவுத் திருவிழா கொண்டாடினர். இந்த நிகழ்வினை பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி துவங்கி வைத்தார். உணவுத்திருவிழாவை முன்னிட்டு ஏராளமான உணவுப் பதார்த்தங்களை வீட்டிலிருந்து செய்து கொண்டு வந்திருந்தனர்.  சின்னஞ்சிறு குழந்தைகள் உண்ண வேண்டிய ஆரோக்கியமான உணவுகள் குறிப்பாக சிறுதானிய உணவுகள், தவிர்க்க வேண்டிய எண்ணெய் மற்றும் துரித உணவுகள், நொறுக்குத் தீனிகள் பற்றிய நாடகம் ஒன்றை நடித்துக் காட்டினர். உண்ணக்கூடிய  உணவுப் பொருட்களை ஒரு அறையிலும் தவிர்க்க வேண்டிய உணவுப் பொருட்களை ஒரு அறையிலும் தனித்தனியே காட்சிப் படுத்தியிருந்தனர். பார்வையிட்ட பெற்றோர்களிடம் தாங்கள் கொண்டுவந்து காட்சிப்படுத்தியிருந்த உணவுப் பதார்த்தங்களின் பெயர்களையும் அவற்றை சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகளையும், உண்ணக்கூடாத பதார்த்தங்களின் பெயர்களையும் அவற்றைச் சாப்பிட்டால் உடலுக்கு ஏற்படும் தீமைகளையும் சிறப்பாக எடுத்துக்கூறிய  குழந்தைகளை  பார்வையாளர்கள் வெகுவாகப் பாராட்டினர் மழலை மாணவர்களின் உணவுக்கண்காட்சியை பள்ளியின் துணைமுதல்வர் குமாரவேல், பள்ளியின் மனநல ஆலோசகர் மார்ட்டின், ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் ஆசிரியப்பெருக்களும் ஏராளமான பெற்றோர்களும் கண்டு களித்து உண்டு மகிழ்ந்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை  முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு ஆசிரியைகள் சிவதர்சினி, சுசிலா, உமாராணி, ராஜகுமாரி   ஆகியோர் செய்திருந்தனர்.