
September 2021
Gandhi Jayanthi Celebration 2021
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் மகாத்மா காந்தியின் 153வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு பள்ளியில் மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு விழாவில் பரிசுகள் வழங்கி பாராட்டப்பட்டனர்.
October 2021
XII – Std Result 2020 – 2021
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சிபெற்ற மாணவர்கள் அனைவரும் மரக்கன்றுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். விதை கலாம் அமைப்பின் சார்பாக நிறுவனர் மலையப்பன் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் மரக்கன்றுகள் வழங்கினார். பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு சால்வை அணிவித்து புத்தகங்களை பரிசாக வழங்கி வாழ்த்தினார்.
November 2021
December 2021
ஹெலிகாப்டர் விபத்தில் வீரமரணம் அடைந்த இராணுவ வீரர்களுக்கு ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர்
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் இராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் இராவத், அவரது மனைவி மற்றும் பிபின் இராவத் உதவியாளர், பாதுகாப்பு கமாண்டோக்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்ட 13 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்திய தேசத்தின் பாதுகாப்புக்காக தங்களையே அர்ப்பணித்த மாபெரும் வீரர்களுக்கு பள்ளி மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்வில் பள்ளி முதல்வர் கவிஞர். தங்கம் மூர்த்தி, ஆசிரியர்கள் மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.
மறைந்த முப்படை தலைமைத் தளபதிக்கு அஞ்சலி
ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் மரம் நண்பர்கள் சார்பில் மறைந்த முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட இராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
துளிர் வாசகர் திருவிழா
ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியும் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்திய மாணவர்களுக்கான துளிர் வாசகர் திருவிழா பள்ளி முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களின் தலைமையில் கொண்டாடப்பட்டது.
February 2022
73வது குடியரசு தினவிழா 2022
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் 73 வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளியின் முதல்வர் தங்கம் மூர்த்தி அவர்கள் தலைமையேற்று தேசியக்கொடி ஏற்றிவைத்து இனிப்புகள் வழங்கினார். அவர் பேசும் போது தலைவர்களையும் நூல்கள் வாசிப்பதின் முக்கியத்துவத்தை பற்றி எடுத்துரைத்தார். அனைத்து நாடுகளையும் ஒப்பிடுகையில் இந்தியாவில் பேச்சுரிமை மற்றம் எழுத்துரிமை வழங்கப்பட்டுள்ளது அதை சரியான வழியில் பயன்படுத்த அறிவுறுத்தினார். ஆசிரியைகள் சிம்ரன் பிரைட், உமா மகேஸ்வரி, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் குடியரசு தின சிறப்புகளைப் பேசினார்கள். ஆசிரியைகள் இணைந்து தேசப்பக்தி பாடல்களைப் பாடினர். விழாவில் துணை முதல்வர் குமாரவேல், ஒருங்கிணைப்பாளர் கௌரி, ஆசிரியை ராஜாமணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவை உடற்கல்வி ஆசிரியர் அருண்குமார் ஒருங்கிணைத்தார். முன்னதாக ஆசிரியை ஆனந்தி…
April 2022
மாணவர்கள் படைப்பாற்றல் கண்காட்சி – 2022
23.04.2022 புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் திறன் வெளிப்படுத்தும் படைப்பாற்றல் கண்காட்சி நடைபெற்றது. பொதுவாக நடத்தப்படுகிற கண்காட்சிகளில் அறிவியல் செய்முறைகள் மட்டுமே காட்சிப்படுத்தப்படும். அறிவியல் மட்டுமல்லாது தமிழ், ஆங்கிலம், கணிதம், சமூக அறிவியல், கணிணியியல் என அனைத்துப் பாடத்திற்குமான அறிவினை செய்முறையினை மாணவர்கள் வெளிப்படுத்திட வேண்டும் என்று பள்ளி முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி ஏற்பாடு செய்திருந்த மாணவர்களின் கண்காட்சியினை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் சாமி சத்தியமூர்த்தி துவங்கி வைத்து 'மாணவர்களின் திறமைகள் நம்மை வியக்க வைக்கின்றன. மாணவர்கள் தங்கள் படைப்பாற்றலை விளக்கும் விதமும், மொழி ஆளுமையாகவும் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. படைப்பாhற்றல் திறமைகளைப் பாராட்டுவதோடு மாணவர்கள் கட்டிக் காக்கும் ஒழுக்கத்தையும் மனதாரப் பாராட்டுகிறேன். பள்ளி…
June 2022
Library Field Trip 2022-2023
கல்வி பயணத்தில் ஓர் களப்பயணம்! ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் நூலகக் களப்பயணம் புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியின் மாணவர்கள் களப்பயணமாக புதுக்கோட்டை மாவட்ட பொது நூலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பொது நூலகத்துக்குச் சென்ற ஒன்பதாம் வகுப்பு மாணவர்களை முதல்நிலை நூலகர் திருமதி சசிகலா அவர்கள் வரவேற்று இனிப்புகள் வழங்கி நூலகத்தை பார்வையிட அழைத்துச் சென்றார். எண்ணிலடங்கா நூல்களை ஓரே இடத்தில் கண்டதும் மாணவர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். அடுக்கி வைக்கப்பட்டிருந்த கட்டுரைகள் நாவல்கள் பொது அறிவு நூல்கள், கவிதைகள் என புத்தக அலமாரிகளை தேடித்தேடி மாணவர்கள் ஆர்வமுடன் புத்தகங்களை எடுத்து வாசித்தனர். மாணவர்களின் வாசிக்கும் ஆர்வத்தைக் கண்ட முதல் நிலை நூலகர் சசிகலா அவர்கள் மாணவர்களை நூலகத்தில்…