என் பண்டிகையின் நாட்குறிப்பிலிருந்து
தங்கம் மூர்த்தியின்
படைப்பாற்றலின்
வெளிப்பாடாக…
பெரும்பாலான இரவுகள் உறக்கமற்றதாய் இருந்து விடுகின்றன. சில இரவுகளில் இமைகள் மூடியபடி இருக்கும். மனசு திறந்துகிடக்கும். அன்றைய நாளின் நிகழ்வோ, மகிழ்வோ, கவலையோ, படித்ததோ, பாதித்ததோ, எதுவோ கவிதைகளாய்க் கிளர்ந்து மனசை மூடிக்கொள்ளும். அப்போதே விழிகள் திறந்து கொள்ளும். அப்படியாக எழுதப்பட்ட பல கவிதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. அதனால் இரவுகளின் குரல் கொஞ்சம் தூக்கலாகத் தெரியலாம்.
0 Comments