பொருளடக்கம்
- மலரினும் மெல்லியது
- காற்று
- நான் காணும் பாரதி
- மென்மைக் காதல் (சீதை)
- காகிதம் ஓர் ஆயுதம்
- பணம்
- காகித ஆயுதங்கர்
- புத்தகம்
- காலங்களில் வசந்தம்
- மழலைப் பருவம்
- ஒரு எளிய கவிதை பொன்னாடை
- வெளிப்படும் வேளை
- தமிழ் நம் வேர்
- பண்பாட்டுப் பொங்கல்
- மூச்சுத் தினறும் சரசுவதி தேவி
- ஒற்றுமை வேற்றுமை வரைக
- நதிகனின் மாநாடு
- மலர்களின் மாநாடு
- ஆயுதங்கனின் மாநாடு
- பொங்கட்டும் புத்தாண்டில் = தாயகப் மற்று
- சூர்ப்பனகையுடன் ஒரு சுற்றுப்பயணம்
- காகிதம் ஓர் ஆயுதம்
- புதுக்கோட்டை
கவிதையில் நனைந்த காற்று
கவியரங்கக் கவிதைகள்
தங்கம் மூர்த்தி
கவிஞர் கந்தர்வனுக்கு…
இவைகளில் அதீத கவித்துவத்தைத் தேடியலைந்து அது கிடைக்காமல் போனால் நான் பொறுப்பல்ல. மெட்டுக்கும், காட்சிக்கேற்றார் போலும் திரைப்பாடலெழுதுவதைப்போல தரப்படுகிற அல்லது திணிக்கப்படுகிற தலைப்புக்கா எழுதப்படுகிற கவிதைகள் இவை.
அதையும் மீறி அடடே இது நல்லாயிருக்கே என்று நீங்கள் உணர்ந்தால் அது அன்றைய சூழலின் வெற்றியே தவிர எனக்கதில் பெரும் பங்கொன்றுமில்லை. கவியரங்கங்களில் வெற்றிபெறுதல் அவ்வளவு எளிதல்ல. அங்கே பரிமாறுவதைத்தான் ருசிக்கவேண்டும் என்ற நிலையில்லை. ருசியறிந்து பரிமாறியாக வேண்டும். சுவையில் குறையிருந்தால் வெளிநடப்பு செய்துவிடுவார்கள். சுவையான வரிகளும், சரியான வாசிப்பும் வாய்க்காவிடில் அரங்கத்தில் நாம் இருந்தும் இல்லாமல் போகிற ஆபத்து நேரிடலாம். வேடிக்கையாகச் சொல்வதெனில் கொஞ்சம் அதிர்ஷ்டம் வேண்டும். ரசனை மிகுந்த சுவைஞர்கள் கூடவேண்டும். அவர்கள் சோர்ந்து போகாத நேரத்தில் நம் வாசிப்பு நிகழவேண்டும். அரங்கச்சூழல் அறிந்து அதையொட்டி அப்போதே ஏதேனும் எழுதி ஈர்க்கவேண்டும். நல்ல வரியை வாசிக்கிறபோது அந்தப் பகுதியின் சங்கு ஒலிக்காமல் இருக்க வேண்டும். இவ்வாறெல்லாம் பல சூட்சுமங்களோடுதான் கவியரங்கங்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது.
கவியரங்கம் ஒரு கவிஞனுக்கு அவசியம் தேவைப்படுகிற அனுபவம். நல்ல கவிதைக்கான வரவேற்பை கண்ணெதிரே காணலாம். ஒலிபெருக்கி வழியே பயணிக்கும் குரல் செவிகளைச் சென்றடைகிற சொற்ப நொடிகளுக்குள் கவிதையைப் புரிய வைக்கும் அற்புதம் நிகழ்ந்துவிட வேண்டும். அதனால்தான் கவியரங்கக் கவிதை என்பதை நிகழ்த்துகலை (Performing Art) என்பார் கவிக்கோ அப்துல் ரகுமான்.
அச்சுக் கவிதைகளுக்கான அளவுகோல்களைக் கொண்டு கவியரங்கக் கவிதைகளை அளக்கக்கூடாது.
அச்சுக்கவிதை காகிதத்தில் மெளனமாகப் படுத்திருக்கிறது.
0 Comments