- This event has passed.
புதுக்கோட்டை சமஸ்தானத்தின் ஒன்பதாவது மன்னரான மாமன்னர் ராஜகோபால தொண்டைமான் 1922 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23 ஆம் நாள் புதுக்கோட்டையில் பிறந்தார். அவரது நூற்றியோராவது பிறந்தநாள்விழா இன்று புதுக்கோட்டை மக்களால் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மாமன்னர் இராஜகோபல தொண்டைமான் ஆட்சிகாலத்தில் புதுக்கோட்டை சமஸ்தான மக்கள் வளமுடன் நலமுடன் வாழ்ந்தனர். இந்திய அளவில் சமஸ்தானத்துக்கென்று தனியாக அம்மன் காசு என்ற நாணயத்தை வெளியிட்ட பெருமை தொண்டைமான் மன்னர் பரம்பரையைச்சேரும். இந்திய அரசாங்கம் சமஸ்தானங்களை இணைக்க வேண்டும் என்று அறிவித்தவுடன் முதன்முதலில் தமது சமஸ்தானத்தை இந்திய அரசாங்கத்துடன் இணைத்து வரலாற்றில் இடம்பிடித்த மன்னர் ராஜா இராஜகோபாலதொண்டைமான் ஆவார். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்துக்கு அவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது. புதுக்கோட்டை சமஸ்தான மன்னரின் பெருமைகளை விளக்கி “புதுக்கோட்டை நம் புகழ்க்கோட்டை எனும் பாடல் எழுதியதன் மூலம் உலகத்தமிழர்களால் பாராட்டப்பட்ட கவிஞர், பள்ளியின் முதல்வர் தமிழ்ச்செம்மல் தங்கம்மூர்த்தி அவர்களின் வழிகாட்டுதலின்படி ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் புதுக்கோட்டை சமஸ்தான கடைசிமன்னர் திருமிகு ராஜாராஜகோபால தொண்டைமான் அவர்களின் நூற்றி்யோராவது பிறந்தநாள்விழாவைக் கொண்டாடும் வகையில் மாவட்டஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்து அங்குள்ள மாமன்னர் ராஜா ராஜகோபாலதொண்டைமான் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். மேலும் மாணவமாணவிகள் மன்னர் அரண்மனையை சுற்றிப்பார்த்து வியந்தனர். வரலாற்றுப் பெருமைகளை மாணவர்கள் அறிந்து மகிழ்ச்சி அடைந்தனர். நிகழ்வில் பள்ளியின் துணைமுதல்வர் குமாரவேல், மேலாளர்ராஜா, ஒருங்கிணைப்பாளர் அபிராமசுந்தரி, ஆசிரியர்கள் துர்காதேவி, சின்னையா, ரவிக்குமார், பாலமுருகன் காசாவயல்கண்ணன் உள்ளிட்ட ஆசிரியப்பெருமக்கள் கலந்து கொண்டனர்