- This event has passed.
புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்டவரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி தொடர்ந்து 10ஆவது ஆண்டாக கம்பன் பெருவிழா போட்டிகளில் அதிக பரிசுகள் வென்று அனைவரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது. கம்பன் பெருவிழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு கம்பன் பாடல்கள் ஒப்புவித்தல் போட்டி மற்றும் பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் பள்ளியின் எல்,கே.ஜி. முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அதிக அளவில் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர். கம்பன் கழக வெற்றிக் கோப்பையை நகராட்சி தலைவர் திலகவதி செந்தில், மற்றும் கம்பன் கழக நிர்வாகிகள் வழங்கிட பள்ளியின் ஆசிரியப்பெருமக்கள் பெற்றுக்கொண்டர். இவ்வாண்டு பெற்ற மொத்த பரிசுகள் 24 ஆகும். பரிசு பெற்ற மாணவர்களை கம்பன் கழகத் தலைவர் எஸ்.ஆர்.என்ற ராமச்சந்திரன், செயலாளர் ரா. சம்பத்குமார் கம்பன் கழக நிர்வாகிகள் மற்றும் பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி தாளாளர் அஞ்சலிதேவி தங்கம் மூர்த்தி ,துணை முதல்வர் குமாரவேல், மற்றும் ஆசிரியப்பெருமக்கள் ஆகியோர் வாழ்த்தினர்.