- This event has passed.
புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் புதுக்கோட்டை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல்துறையுடன் இணைந்து நடத்திய போதைப் பொருள் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
போதைப் பொருள் பயன்பாட்டிற்கு எதிரான சமூக விழிப்புணர்வு பெறும் நோக்கில் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்படும் பல்வேறு நடவடிக்கையின் ஒரு பகுதியாக கடந்த ஆண்டு போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதன் தொடர்ச்சியாக, பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக போதைப் பொருள் பயன்பாடற்ற தமிழ்நாடு பெருந்திரள் போதை எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றல் மற்றும் விழிப்புணர்வு பேரணியை பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமையில் புதுக்கோட்டை மதுவிலக்கு அமலாக்கபபிரிவு காவல் ஆய்வாளர் மணமல்லி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியானது பள்ளியிலிருந்து தொடங்கி மேலமேட்டுத்தெரு வழியாக திருவப்பூர் ரயில்வே கேட் சென்று மாரியம்மன் கோயில் வழியாக பள்ளியை வந்தடைந்தது. போதைபொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியில் “ கைவிடு கைவிடு மதுப்பழக்கத்தைக் கைவிடு,” “குடிக்காதே குடிக்காதே மதுபானங்களைக் குடிக்காதே,” “அழிக்காதே அழிக்காதே குடும்ப நலனை அழிக்காதே” போன்ற கோஷங்களை எழுப்பியது கடைவீதிகளில் பொதுமக்களுக்கான விழிப்புணர்வாக அமைந்தது. நிறைவாக மாணவர்கள் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்த நிகழ்வில் காவல்துணை ஆய்வளர் பாலாஜி, காவலர்கள் சங்கர நாராணண், கந்தவேல், செபஸ்டின், பள்ளியின் துணைமுதல்வர் குமாரவேல், பள்ளியின் ஒருங்கிணைப்பாளர்கள் கௌரி, அபிராமசுந்தரி, ஆசிரியர்கள் கமல்ராஜ், காசாவயல் கண்ணன், உதயகுமார், கணியன் செல்வராஜ், ராமன் மற்றும் ஏராளமான மேல்நிலை வகுப்பு ஆசிரியர்கள்; கலந்து கொண்டனர்.