Loading Events
  • This event has passed.

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியும் புதுக்கோட்டை தாரா மருத்துவமனையும் இணைந்து இலவச மருத்துவ முகாம் வெங்கடேஸ்வரா மெட்ரிக்.பள்ளியில் நடைபெற்றது. இந்த முகாமை தாரா மருத்துவனை நிறுவனர் மருத்துவர் தனசேகரன் துவக்கி வைத்தார் அவர் பேசும்போது பொதுவாகவே மாணவர்களுக்கு கல்வியும் ஆரோக்கியமுமே அதிமுக்கியமானது. அந்த வகையில் பள்ளி முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள் தங்கள் மாணவர்களின் கல்வியில், ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறையோடு உள்ளார். இந்த முகாமின் நோக்கம் குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தை பரிசோதனை செய்து தேவையான மருத்துவ சிகிச்சை செய்வதாகும். இங்கே பெரும்பாலான குழந்தைகள் வயிற்று வலி, குடல் புழு, தலைவலி, உடல் சோர்வு என்று தங்கள் பிரச்சனைகளை கூறுகிறார்கள். தினமும் பெற்றோர்கள். குழந்தைகள் மேல் மிகுந்த அக்கறை எடுத்துக் கொண்டு நல்ல உணவு வகைகளை வழங்கி சத்தான காய்கறிகள், பழங்கள் கொடுக்க வேண்டும். குடிக்கும் தண்ணீர் சுத்தமாக உள்ளதா என பரிசோதித்த பின்னரே கொடுக்க வேண்டும். பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு மதிய உணவு வகைகளை சுகாதாரமான முறையில் கெடாமல் இருக்கும் உணவினைக் கொடுத்துவிட வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுகளையோ, குளிர்சாதனப் பெட்டிகளில் வைக்கப்பட்ட திண்பண்டங்களையோ கொடுப்பதன் மூலம் குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. வருகின்ற மழைக்காலங்களில் குழந்தைகளை குளிக்க வைக்கும்போது நல்ல தண்ணீரில் சுடுநீரில் குளிக்க வைத்தால் சளி இருமல் வராமல் தடுக்கலாம். இந்த மருத்துவ முகாமில் குழந்தைகள் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கும் மருத்துவப் பரிசோதனை சிறப்பாக செய்யப்படுகிறது என்று தெரிவித்தார். இந்த மருத்துவ முகாமில் மருத்துவர்கள் கிஷோர், சசிரேகா,ராஷ்மி ஆகியோர் கலந்து கொண்டு மருத்துவப் பரிசோதனை செய்தனர்.இந்த மருத்துவ முகாமில் 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். நிகழ்வில் பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி அனைவரையும் வரவேற்றார்; பள்ளியின் இயக்குனர் சுதர்சன். துணைமுதல்வர் குமாரவேல், அரசு சிறப்பு வழக்கறிஞர் செந்தில்குமார், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் மகாத்மா ரவிச்சந்திரன், பேராசிரியர்கள் அய்யாவு, கருப்பையா மேலாளர் ராஜா, ஆசிரியர்கள் உதயகுமார், ராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.