- This event has passed.
புதுக்கோட்டை, திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர் மாநில அளவிலான பளு தூக்கும் போட்டியில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். தமிழ்நாடு அமெச்சூர் பளுதூக்கும் சங்கம் மாநில அளவில் 19வது இளைஞர்கள் மற்றும் பெண்கள் பளு தூக்குதல் சேம்பியன்சிப் போட்டிகளை நடத்தியது. சேலத்தில் நடைபெற்ற இந்தப் போட்டிகளில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்துகொண்டனர். இதில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர் எம். அப்துல் ரகுமான் மாணவர்களுக்கான 67 கிலோ எடைப்டபிரிவில் முதல் இடமும், ஆண்களுக்கான ஜுனியர் பளு தூக்கும் பிரிவில் இரண்டாம் இடமும் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளார். பளு தூக்கும் போட்டியில் வெற்றிபெற்று சான்றிதழ் மற்றும் பதக்கங்களுடன் பள்ளிக்கு வந்த மாணவரை மாநில ஆசிரியர் மனசு திட்ட ஒருங்கிணைப்பாளர் சிகரம் சதீஸ்குமார் நினைவுப்பரிசு வழங்கி பாராட்டினார். இந்த நிகழ்வில் பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி மற்றும் ஆசிரியர்கள் வெற்றி பெற்ற மாணவனை வாழ்த்தினர்.