- This event has passed.
புதுக்கோட்டை தமிழ்ச்சங்கத்தின் தலைவர் கவிஞர் தங்கம் மூர்த்தி பிரான்சு, சுவிஸ்சர்லாந்து, இத்தாலி போன்ற நாடுகளுக்கு இலக்கியப் பயணம் மேற்கொண்டு பல்வேறு கருத்தரங்குகளில் பங்கேற்றார். அவருக்கு ஐரோப்பிய தமிழ் ஆய்வு மைய மாநாட்டில் “கவிநயச்சுடர்” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. கவிஞர் தங்கம் மூர்த்தி பாரிஸ் நகரில் நடைபெற்ற ஐந்தாவது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாட்டில் கலந்து கொண்டார். அதில் தொல்காப்பியம்- பல் நோக்குப் பார்வை, திருக்குறள்- யுனெஸ்கோ உலகநூல் ஒப்புதல், மொழிபெயர்ப்புகள் மற்றும் புலம்பெயர் நாடுகளில் தமிழ் வளர்ச்சி ஆகிய அமர்வுகளில் கலந்து கொண்டு சிறப்பாக உரையாற்றினார். தங்கம் மூர்த்தியின் தமிழ்பற்று மற்றும் தமிழ்மொழிக்கான சேவையைப் பாராட்டி “கவிநயச்சுடர்” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். ஐரோப்பிய நாடுகளில் இலக்கியப் பயணம் மேற்கொண்டு தொல்காப்பிய மாநாடு மற்றும் கவிஞர் ஈழபாரதியின் கவிதைநூல் வெளியீடு ஆகிய நிகழ்வுகளில் பங்கேற்று கவிநயச்சுடர் விருது பெற்று தாயகம் திரும்பிய தமிழ்ச்செம்மல் கவிஞர் தங்கம் மூர்த்தியை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி வாசிப்போர் மன்ற மாணவர்கள், மற்றும் புதுக்கோட்டைத் தமிழ்ச்சங்க நிர்வாகிகள் ஆரத்தி எடுத்து மாலையணிவித்து வரவேற்றனர். இந்த நிகழ்வில் பள்ளியின் சட்ட ஆலோசகர் அரசு சிறப்பு வழங்கறிஞர் செந்தில்குமார் மற்றும் புதுக்கோட்டைத் தமிழ்ச்சங்க நிர்வாகிகள் கவிஞர் மகாசுந்தர், பேராசிரியர் கருப்பையா, கவிஞர் பீர்முகமது, கவிஞர் டெய்சிராணி, பள்ளியின் இயக்குநர் சுதர்சன், துணைமுதல்வர் குமாரவேல், மேலாளார் ராஜா, பள்ளியின் ஒருங்கிணைப்பாளர்கள் கௌரி. வரலெட்சுமி, பாலசங்கர், மீனாட்சி ஆசிரியர்கள் காசாவயல் கண்ணன், உதயகுமார் மற்றும் ஏராளமான ஆசிரியர்களும், மாணவர்களும் கலந்து கொண்டு விருது பெற்ற கவிஞரை வரவேற்றனர்.