- This event has passed.
புதுக்கோட்டை, திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் எகிப்து நாட்டில் நடைபெற்ற உலக அளவிலான டிரையாத்தல் (Swimming, Running & Shooting) போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை புரிந்துள்ளனர்.
பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயிலும் ம. சந்தோஷிகா, ஏழாம் வகுப்பு பயிலும் ம. நிஷந்த் கிருஷணன், ஒன்பதாம் வகுப்பு பயிலும் ம. தனுஷ் கிருஷ்ணன் ஆகிய மூவரும் ஏற்கனவே உத்ரகாண்ட் மாநிலத்தில் இந்திய அளவில் நடைபெற்ற டிரையாத்தல் ((Swimming, Running & Shooting) போட்டியில் வெற்றி பெற்று சர்வதேச போட்டிக்கு தகுதி பெற்றவர்கள்.
தற்போது எகிப்து நாட்டில் நடைபெற்ற சர்வதேசப் போட்டிகளில் கலந்து கொண்டு எம். தனுஷ் கிருஷ்ணன் பயாத்தல் போட்டியில் 6வது இடமும், டிரையாத்தில் 8வது இடமும் மற்றும் டீம் மெடல் 2வது இடமும் பெற்றுள்ளார். ம. நிஷந்த் கிருஷணன் பையத்தலில் 7வது இடமும், டிரையாத்தலில் 8வது இடமும் பெற்றுள்ளார். எம். சந்தோஷிகா பயாத்தல் 4வது இடமும் டிரையாத்தல் 6வது இடமும் மற்றும் டீம் மெடல் இரண்டாம் இடமும் பெற்றுள்ளார். டிரையாத்தல் போட்டிகளில் சர்வதேச அளவில் வெற்றிபெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்த மாணவர்களை பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி மற்றும் பள்ளியின் இயக்குநர் சுதர்சன் ஆகியோர் பொன்னாடை அணிவித்து நினைவுப்பரிசுகள் வழங்கி வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.