Loading Events
  • This event has passed.

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மழலை மாணவர்கள் களப்பயணமாக நார்த்தாமலை அருகில் உள்ள இப்ராஹிம் பார்க் பார்வையிட அழைத்துச் செல்லப்பட்டனர். பள்ளியி;ல் எல்கேஜி மற்றும் யூகேஜி பயிலும் இருநூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் களப்பயணமாக இப்ராஹிம் பார்க்கை பார்வையிட்டனர். அங்கே சின்னச் சின்ன பறவைகள், விலங்குகள் முதல் மிகப்பெரிய நெருப்புக்கோழி, ஒட்டகம் மற்றும் விதவிதமான பாம்புகளை மாணவர்கள் ஆர்வமுடன் கண்டு மகிழ்ந்தனர். வெளிநாடுகளில் வாழும் பசு மற்றும் எருமை மாடுகள், பல வண்ணப் பறவைகள், குரங்குகள், மிக உயர்ந்த வெள்ளைக் குதிரைகள் என கண்ணைக் கவரும் வகையில் கண்டு மகிழ்ந்தனர். மாணவர்கள் பார்iவியட்ட அத்தனை மிருகங்கள், பறவைகளின் ஆங்கிலப் பெயர்களை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு விளக்கிக் கூறினர். இதுபற்றி பள்ளி முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி கூறும்போது, “மழலைச் செல்வங்கள் பாடப்புத்தகங்களில் பார்த்துப் படித்த விலங்குகள் மற்றும்; பறவைகளை நேரடியாகக் கண்டு அதன் பெயர்களை ஆங்கிலத்தில் அறிந்து கொள்வதற்கும் அவை எந்தெந்த நாட்டில் வசிப்பவை என்ற விவரங்களையும் மாணவர்கள் இந்த சின்னவயதிலேயே அறிந்து கொள்வதற்கு இதுமாதிரி களப்பயணங்கள் பயனுள்ளதாக அமைகின்றது” என்று குறிப்பிட்டார். இந்த நிகழ்வில் பள்ளி முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி, இயக்குனர் சுதர்சன், துணை முதல்வர் குமாரவேல் வழிகாட்டுதலில் மழலையர் ஒருங்கிணைப்பாளர் மீனாட்சி மற்றும் ஆசிரியர்கள் சந்தியா, சினேகா. சந்திரகலா, ரீஜல்மேரி, ஆகியோர் ஒருங்கிணைத்தனர். எட்டு மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதம் பதினைந்து ஆசிரியர்கள் மாணவர்களை பத்திரமாக களப்பயணத்திற்கு அழைத்துச் சென்று வந்தனர்.