Loading Events
  • This event has passed.

22.02.2024 புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் மழலை மாணவர்களுக்கு  பட்டமளிப்பு விழா நடைபெற்றது.  பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி விழாவுக்கு தலைமை ஏற்றார். கவிஞர் எழுத்தாளர் தன்னம்பிக்கைப்; பேச்சாளர் கவி.முருகபாரதி சிறப்பு விருந்தினராக  கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரை நிகழ்த்தினார். அவர்; பேசும்போது  “ஒரு பெயர் அடையாள அட்டையில் இருந்தால் அந்த நபர் பள்ளியில் மாணவராகவோ, அலுவலக பணியாளராகவோ இருப்பார். அந்தப் பெயர் ஒரு மேசையின்மீது இருந்தால் அவர் அதிகாரியாக இருப்பார்  அந்தப்பெயர் ஒரு கட்டிடத்தில் பொறிக்கப்பட்டடிருந்தால் அவர் ஒரு முதலாளியாக இருப்பார் ஒரு தெருவுக்கு அந்தப் பெயர் சூட்டப்பட்டிருந்தால் அவர் ஒரு தியாகியாக, தலைவராக, இருப்பார், அப்படிப்பட்ட  பண்புள்ள தலைவர்களாக, அறிஞர்களாக உங்கள் குழந்தைகள் வளர வேண்டும். ஒரு விதை நல்ல  வளமான இடத்தில்  விதைக்கப்பட்டால் அது நல்ல பயனுறு மரங்களை தரும். அப்படித்தான்  நீங்கள் உங்கள் குழந்தைகளை ஒரு நல்ல இடத்தில் வெங்கடேஸ்ரா பள்ளியில் சேர்த்திருக்கின்றீர்கள்.  உலப்புகழ்பெற்ற ஓவியர் பிக்காசோ  இல்லத்துக்குச் சென்ற ஒருவர் அவரின் ஒரு ஓவியம் கூட அங்கு இல்லாதது கண்டு பிகாசோவிடம் வினவினார் அதற்கு பிகாசோ இப்படிச் சொன்னார். பிகாசோவின் ஓவியங்களை வைத்துக்கொள்கின்ற அளவிற்கு நான் வசதிபடைத்தவன் அல்லன் என்று பிகாசோவே சொன்னாராம்.  ஆக நம்முடைய பெருமையை முதலில் நாம் உணரவேண்டும் மதிப்பளிக்க வேண்டும். பெற்றோர்கள் உங்கள் கனவுகளை குழந்தைகளிடம் திணிக்காதீர்கள். அவர்களின்  ஆசைப்படி அவர்களை வளரவிடுங்கள்.  இன்று பட்டம் பெற்றிருக்கின்ற அனைத்து மழலை மாணவர்களுக்கும் என் வாழ்த்துகளை தெரிவிக்கிறேன் என்று பேசினார். விழாவில் பேராசிரியர் அய்யாவு, கவிஞர் மகாசுந்தர், மகாத்மா பள்ளி ரவிச்சந்திரன்,  பாவேந்தர் பள்ளி காசிநாதன், பள்ளியின் துணை முதல்வர் குமாரவேல் ஒருங்கிணைப்பாளர்கள்  கௌரி, கோமதிபிள்ளை, மழலையர் ஆசிரியைகள் சந்திரகலா, பவுலின் மற்றும் பள்ளியின் மேலாளர் ராஜா, ஆசிரியர்கள் உதயகுமார்; ராமன் உள்ளிட்ட ஆசிரியப்பெருமக்களும் பெற்றோர்களும் திரளாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை ஆசிரியர்கள்; அட்சயா, சுபஸ்டி ஆகியோர் தொகுத்து வழங்கினர். தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை யுகேஜி மாணவர்கள் லிகன்யாஸ்ரீ, ஆத்மிகா, தன்விகா ஆகியோரும் தேசிய கீதம் பாடலை அஸ்மிரா ரிஹானா, சஞசித் ரோஷன், சத்யஸ்ரீ ஆகியோர் பாடினர் முன்னதாக யுகேஜி மாணவர் அர்ஜுன் சேகர் வரவேற்க நிறைவாக யுகேஜி மாணவி மஹிதா  நன்றி கூறினார்.