- This event has passed.
உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் முதல் புகைப்படக் கருவி மற்றும் திரைப்படக் கருவி காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. புகைப்படத்திலிருந்து சினிமா என்கிற நிலைக்கு தொழில்நுட்ப மாற்றம் நிகழ்த்திய கருவிகளை சேகரித்து பாதுகாத்து வரும் நா. முகமது அப்சர் என்ற பதினொன்றாம் வகுப்பு மாணவன் காட்சிப் படுத்தியிருந்தார். முதல் சினிமா கருவியோடு உலகத் திரைப்பட தினத்தை முன்னிட்டு சினிமா தொழில்நுட்பம் வளர்ந்த வரலாறுகளை மாணவன் விளக்கிக் கூறினார். பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் முதல் சினிமா கருவியை பார்த்து வியந்து அவற்றோடு செல்பி எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்வில் பள்ளி முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி மாணவனைப் பாராட்டி பரிசு வழங்கினார். துணைமுதல்வர் குமாரவேல் மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர்.