Loading Events
  • This event has passed.
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 500-க்கும் மேற்பட்ட ஆங்கிலச் சொற்களுக்கு உடனுக்குடன் ஸ்பெல்லிங்  சொல்லி அசத்தினர்.
மாணவர்களுக்கு பல புதுமையான போட்டிகள் நடத்தி அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வரும் விதமாக முன்னறிவிப்பு இல்லாமல் ஐநூறு ஆங்கிலச் சொற்களுக்கு ஸ்பெல்லிங் கேட்டு நடத்தப்பட்ட போட்டியில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு உடனுக்குடன் ஸ்பெல்லிங்  சொல்லி அசத்தினர். ஐநூறுக்கும் அதிகமான வார்த்தைகளை வல்லுநர் குழு கேள்வியாக கேட்டு அதற்கு மாணவர்கள் பிழையில்லாமல் பதிலளித்தனர். அதில் பங்கு பெற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. அதில் வெற்றி வாகை சூடிய திறமை மிக்க மாணவர்களான ஐந்தாம் வகுப்பு மாணவி வி.சங்கரி, ஏழாம் வகுப்பு மாணவி    எஸ். அஸ்மிதா ரிபானா, எட்டாம் வகுப்பு மாணவிகள் கே. பிரியதர்சினி, டி.மதுஸ்ரீ,    கே.சிவானி, ஆர்.யுவஸ்ரீ, எஸ்.தாரிகா மற்றும் ஒன்பதாம் வகுப்பு மாணவிகள் டி.சுபிக்சா,  வி.விவேகா ஆகியோர்களுக்கு பள்ளி முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள் சான்றிதழும் மாணவர்கள் வாழ்நாள் முழுதும் பயன்படுத்தும் வகையில் மிகப்பெரிய ஆங்கில தமிழ் அகராதியும் பரிசாக வழங்கி பாராட்டினார்.
இதுபற்றி பள்ளி முதல்வர் தங்கம் மூர்த்தி கூறும்போது “தாய்மொழி தமிழுக்கு நிகராக ஆங்கில மொழி படித்தலும், வாசித்தலும் இன்றைய காலக்கட்டத்தில் இன்றியமையாத ஒன்றாகும். அதனடிப்படையில் எங்கள் பள்ளியில் இதற்கு முன்னர் திருக்குறள் முற்றோதல், கவிதை, கட்டுரை போட்டிகள் மாணவர்களின் திறமைகளை மேம்படுத்த நடத்தியுள்ளோம். அதேபோன்று ஆங்கிலத்திலும் நடத்தப்பட்ட ஸ்பெல்லிங்  போட்டியில் மாணவர்கள் பங்கேற்று தங்களுடைய அசாத்திய திறமைகளை வெளிப்படுத்தியுள்ளார்கள். இவ்வகையான போட்டி மாணவர்களின் எதிர்கால அறிவுத் திறனுக்கு மிகவும் பயன்படும், கடிதம் எழுதுவதற்கும் போட்டித் தேர்வுகளில் பங்கேற்பதற்கும், எதிர்கால வேலை வாய்ப்புக்கான வாசலை திறப்பதற்கும் மிக மிக பயனுள்ளதாக அமையும்” என்று தெரிவித்தார். இந்த நிகழ்வில் பள்ளியின் இயக்குநர் எஸ்.சுதர்சன், துணைமுதல்வர் எஸ்.குமாரவேல் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.