- This event has passed.
திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் பொங்கல்திருநாளை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு கரும்புகள் வழங்கி பள்ளி முதல்வர் தங்கம் மூர்த்தி வரவேற்றார். மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியோடும் வியப்போடும் கரும்பினைப் பெற்றுக் கொண்டு நன்றி தெரிவித்தனர். தைமாதம் பிறக்கப் போவதை ஒட்டி ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி வளாகம் கரும்புகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது.
பள்ளி நுழைவாயிலிலும், வகுப்பறை வாசல்களிலும் கரும்புகள் கட்டப்பட்டு மாணவர்களை வரவேற்ற விதம் புதுமையாக அமைந்திருந்தது. மாணவர்களை கனியே, கற்கண்டே, கரும்பே என்று செல்லமாக அழைப்பதுண்டு. கரும்புகளே கரும்புகளை சுமந்து வந்த காட்சிகள் அனைவரையும் மிகவும் கவர்ந்தது.