- This event has passed.
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்,களப்பயணமாக முழுவதும் கல்லால் கட்டப்பட்ட கற்கோயில் சோம சுந்தரேஸ்வரர் ஆலயம் மற்றும் பொற்பனைக்கோட்டை அகழாய்வு இடத்தைப் பார்வையிட்டனர். பள்ளியின் ஒன்பதாம் வகுப்பைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் சங்க கால வாழ்விடப்பகுதியாக விளங்கும் பொற்பனைக்கோட்டையை பார்வையிட்டனர். தமிழக தொல்லியல் துறை மூலம் அகழாய்வு மேற்கொள்ளும் இயக்குநர் தங்கதுரை பள்ளி மாணவர்களுக்கு அகழாய்வு பணி நடக்கும் இடத்தைச் சுற்றிக் காட்டி இதுவரையில் தாங்கள் அகழாய்வில் கண்டெடுத்த தங்க மூக்குத்தி, பிராமிய எழுத்தாலான மண்பாண்டத்தின் ஓடுகள் உள்ளிட்ட அரிய பொருட்களை காண்பித்து அவைகள் பயன்பாட்டில் இருந்த காலத்தையும் குறிப்பிட்டார். ரோமானியர்களோடு வாணிபத் தொடர்பு வைத்திருந்ததற்கான அடையாளங்கள் கிடைத்துள்ளதையும் குறிப்;பிட்டார். மாணவர்கள்;; கோட்டைச் சுவர்கள், அகழாய்வு நடைபெறும் இடங்களை ஆர்வமுடன் அறிந்து குறிப்பெடுத்துக்கொண்;டனர். பாடப் புத்தகங்களைத் தாண்டிய பொது அறிவைப் பெற இதுபோன்ற களப்;பயணங்கள் தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைவதாக மாணவர்கள் மகிழ்வுடன் தெரிவித்தனர். நிகழ்வுக்கு பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமையேற்றார். கவிஞர் பீர்முகமது மற்றும் ஆசிரியர்கள் கமல்ராஜ், காசாவயல் கண்ணன், உதயகுமார், தேவதர்ஷினி, முத்துமணி ஆகியோர் நிகழ்வை ஒருங்கிணைத்தனர்.