- This event has passed.
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் பண்டிட் ஜவஹர்லால் நேரு பிறந்த நாள் விழா புத்தகமில்லா தினமாக கொண்டாடப்பட்டது. குழந்தைகளின் மீது அளவற்ற அன்பும் பாசமும் கொண்டிருக்கும்; பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமையில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது. பள்ளிக்கு வருகை தந்த குழந்தைகளுக்கு ஆசிரியர்கள் மாலை அணிவித்தும் பூங்கொத்து கொடுத்தும் இனிப்புகள் வழங்கியும் வரவேற்றனர். குழந்தைகளைக் கொண்டாடுகின்ற இந்த நாளில் மாணவச் செல்வங்கள் வண்ண உடையணிந்து பள்ளி வளாகம் முழுவதும் மகிழ்ச்சியை விதைத்துச் சென்றனர். புத்தகமில்லா தினம் என்பதால் மாணவர்கள் பாடப்புத்தகங்கள், நோட்டுகள், எதுவுமில்லாமல் கைகளை வீசியபடி பள்ளிக்கு வந்தனர். பள்ளி முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமையில் குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில் ஆசிரியர்கள் குழுக்களாகப் பிரிந்து பாடல், நாடகம், கண்ணைக் கவரும் வகையில் நடனம், நகைச்சுவை நிகழ்ச்சிகள், கதைகள் மற்றும் மாணவர்களுக்கான விளையாட்டுகள் என எராளமான நிகழ்ச்சிகளை நடத்தினர். இன்றைய நாள் முழுவதும் குழந்தைகள் தினத்தை புத்தகமில்லா தினமாக கொண்டாடி தங்களை மகிழ்ச்சியாக, உற்சாகமாக வைத்துக் கொண்டதற்கு ஆசிரியர்களுக்கு மாணவர்கள் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர். இந்த நிகழ்வில் துணைமுதல்வர் குமாரவேல், ஒருங்கிணைப்பாளர்கள் கௌரி, அபிராமசுந்தரி, வரலெட்சுமி, கோமதிபிள்ளை, மற்றும் உதயகுமார், காசாவயல்கண்ணன், கணியன் செல்வராஜ் மற்றும் ஏராளமான ஆசிரியப்பெருமக்கள் கலந்துகொண்டு மாணவர்களுக்கு குழந்தைகள் தின வழத்துகளை தெரிவித்தனர். நிகழ்வை ஆசிரியை சிவதர்சினி ஒருங்கிணைத்தார்.