- This event has passed.
புதுக்கோட்டை வாசகர் பேரவையும் திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியும் இணைந்து குழந்தைக் கவிஞர் அழ. வள்ளிப்பாவின் பிறந்த நாள் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவதை முன்னிட்டு மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கு அழ. வள்ளியப்பா அவர்களின் பாடல் ஒப்புவித்தல் போட்டி> பேச்சுப்போட்டி மற்றும் ஓவியப்போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டிகளில் இருபதுக்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு எதிர்வரும் 30.11.2022 அன்று நடைபெறும் குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா அவர்களின் பிறந்த நாள் நூற்றாண்டு விழாவில் பாராளுமன்ற மாநிலங்களை உறுப்பினர் எம்.எம். அப்துல்லா மற்றும் அழ. வள்ளியப்பாவின் குடும்பத்தினர் முன்னிலையில் பரிசுகள் வழங்கப்படும் என வாசகர் பேரவை தலைவர் பேராசிரியர் விஸ்வநாதன் மற்றும் பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி ஆகியோர் கூட்டாக அறிவித்தனர்.