- This event has passed.
புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் தண்ணீர் தாகத்தை தீர்க்கும் தர்பூசணிப் பழ தினம் கொண்டாடப்பட்டது. சர்வதேச தர்பூசரணி தினமாக உலகெங்கும் கொண்டாடப்படும் நாளில் பள்ளியில் எல்.கே.ஜி முதல் இரண்டாம் வகுப்பு மாணவர்கள் வீட்டிலிருந்து தர்பூசணி ஜுஸ் மற்றும் தர்பூசணி பழக்கீற்றுகளையும் கொண்டு வந்தனர். மழலைக் குழந்தைகள் பச்சை சிவப்பு வண்ணங்கiளில் தர்பூசணி வேடமணிந்தும் கழுத்து காதுகளில் தர்பூசணி வடிவத் தோடுகள் சங்கிலிகள் அணிந்து வந்தனர். வகுப்பறைகளில் தர்பூசணிக் கீற்றுகளால் ஆன தோரணங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தர்பூசணிக் பழக் கீற்றுகளால் உருவாக்கப்பட்ட ஐஸ்கிரீம், லாலிபாப், கேக்குகள், கூடைநிறைய கீற்றுகள் என குழந்தைகள் ஆசை ஆசையாய் வியந்து பார்க்கும் வண்ணம் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. மழலைக் குழந்தைகள் தாங்கள் கொண்டுவந்த தர்ப்பூசணிக் கீற்றுகளை பக்கத்து வகுப்பறைகளுக்குச் சென்று குழந்தைகளுக்கு கொடுத்து மகிழ்ந்தனர்.
தர்பூசணி தினத்தை கொண்டாடும் விதமாக பள்ளியின் மழலை மாணவர்கள் தர்பூசணி பழம் தொடர்பான பாடல்கள், செய்திகளைக் கூறும் நிகழ்வு நடைபெற்றது. பள்ளி முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி கூறும்போது பொதுவாக தர்ப்பூசணி பழம் வெயில் கொடுமையிலிருந்து நம்மைக் காக்கும் இயற்கை குளுக்கோஸ் ஆகும். இது உடல் சூட்டைத் தணிப்பதோடு இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கிறது. சிறுநீரகக் கற்கள் உருவாவதைத் தடுக்கிற ஆற்றல் தர்பூசணிக்கு உண்டு வேறெங்கும் இல்லாத வகையில் எங்கள் பள்ளியில் மழலை மாணவர்களை மகிழ்விக்கும் விதமாகவும், குழந்தைகளுக்கு தேவையான ஆரோக்கிய உணவுப் பொருட்களை அறிமுகப்படுத்தும் விதமாகவும் இதுபோல பயனுள்ள தினங்களைக் கொண்டாடுகின்றோம். பெற்றோர்களும் மிகுந்த ஆர்வத்தோடு குழந்தைகளைக் கொண்டாடும் நிகழ்வுகளில் பங்கெடுக்கின்றனர். என்று கூறினார். நிகழ்வில் பள்ளியின் துணை முதல்வர் குமாரவேல், ஒருங்கிணைப்பாளர்கள் கௌரி, கோமதி மற்றும் மழலையர் வகுப்பு ஆசிரியர்கள் கலந்துகொண்டர்.
இதுமாதிரி புதிய குழந்தைகளுக்கு தேவையான தகவல்களை ஆரோக்கியத்திற்கான என்பதோடு உலகெங்கிலும் உள்ள குழந்தைகள் விரும்பும் இனிப்புச் சுவைமிகுந்த பழமாக தர்பூசணி விளங்குகிறது என்பது போன்ற தர்பூசணி பற்றிய தகவல்களை ஆசிரியப்பெருமக்கள் குழந்தைகளுக்கு தெரிவித்தனர்.