Loading Events
  • This event has passed.

சர்வதேச யோகா தினம் உலகெங்கும் கொண்டாடப்படும் வேளையில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் இன்று மழலையர் மாணவர்கள் யோகாசனம் செய்தனர். கல்வியில் மட்டுமல்ல பிற கலைகளிலும் மாணவர்களுக்கு சிறந்த பயிற்சியை வழங்கிடும் இந்தப் பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி குறிப்பிடுகையில் மனதையும், உடலையும் உயிர் ஆற்றலையும் மேம்படுத்திட தினசரி யோகா பயிற்சி செய்வது அவசியம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி யோகா, கராத்தே, சிலம்பம் போன்ற உடற்பயிற்சிகளை புதன் கிழமை வகுப்புகளில் கற்றுத் தருகின்றோம். இதன்மூலம் மாணவர்கள் மனஅழுத்தமின்றி எளிதாக கல்வி கற்கமுடிகின்றது என்று குறிப்பிட்டார். சர்வதேச அளவில் இன்று ஒரே நாளில் உலகம் முழுக்க யோகா தினம் கொண்டாடப்படும் நிலையில் பள்ளி வளாகத்தில் மழலை மாணவர்கள் அமர்ந்து யோசாசனம் செய்ததைக் கண்டு பெற்றோர்களும் ஆசிரியர்களும் பெரிதும் பாராட்டினர். நிகழ்வில் பள்ளியின் இயக்குனர் சுதர்சன், துணைமுதல்வர் குமாரவேல் மற்றும் ஆசிரியப்பெருமக்கள் கலந்து கொண்டனர்.