- This event has passed.
பள்ளிக்கல்வித்துறையின் சார்பாக மாவட்ட அளவிலான டேக்வாண்டோ மற்றும் குத்துச்சண்டை போட்டிகள் நடத்தப்பட்டது. இப்போட்டியில் மாவட்டம் முழுவதிலிருந்தும் 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சார்ந்த 20 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பல பரிசுகளை பெற்றுள்ளனர். மாவட்ட அளவில் வெற்றிப் பெற்று, மாநிலப் போட்டிக்கு தேர்வான மாணவர்களுக்கு பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.
டேக்வாண்டோ போட்டிகளில் வெங்கடேஷன்- (முதல் பரிசு) தவபிரபு (இரண்டாம் பரிசு) பெற்றனர். குத்துச்சண்டை போட்டிகளில் தர்ஷன் முதல் பரிசு, ஹரிகிருஷ்ணன், ஹரிஸ்குமார் ஆகிய மாணவர்கள் மூன்றாம் இடங்களை பிடித்து பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். இவ்விழாவில் பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி மாணவர்களை பாராட்டி நினைவுப் பரிசாக புத்தகங்களை வழங்கினார். அவர்கள் மென்மேலும் பல வெற்றிகளைப் பெற வாழ்த்துகள் கூறினார். வெற்றிப் பெற்ற மாணவர்களை துணை முதல்வர் குமாரவேல் உள்ளிட்ட ஆசிரியர்கள் பாராட்டினர். இந்நிகழ்வில் பள்ளியின் டேக்வாண்டோ பயிற்சியாளர் ஆகாஷ் மற்றும் குத்துச்சண்டை பயிற்சியாளர் மாஸ்டர் சேது. கார்த்திகேயன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் நீலகண்டன் ஆகியோர் கலந்து கொண்டனர்.