- This event has passed.
புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) திரு. அந்தோணி அவர்களின் அறிவிப்பின் படி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளுக்கு இடையேயான ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டது. மாவட்டத்திலுள்ள அனைத்து தனியார் பள்ளிகளிலிருந்தும் ஒரு மாணவரை மாவட்ட கல்வி அலுவலரே தேர்வு செய்து திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டது. தேர்வில் பொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள் பகுதியிலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டன. இந்த தேர்வில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவி கே. ராகவி மாவட்ட அளவில் முதலிடம் பெற்றார். வெற்றி பெற்ற பள்ளி மாணவி கே. ராகவியை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கவிதா ராமு மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் அந்தோணி அவர்கள் பாராட்டி சான்றிதழும் சுழற்கோப்பையும் வழங்கி வாழ்த்தினர். திறனறி தேர்வில் முதலிடம் பெற்று பள்ளி வந்த மாணவியை பள்ளி முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி, பள்ளி ஆலோசகர் அஞ்சலிதேவி தங்கம் மூர்த்தி, துணை முதல்வர் குமாரவேல் மற்றும் ஆசிரியர்கள் சித்திரை செல்வி, ரவிக்குமார் உள்ளிட்ட ஆசிரியப் பெருமக்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.