Loading Events
  • This event has passed.

புதுக்கோட்டை 31வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை முன்னிட்டுபள்ளி மாணவர்களுக்கான அறிவியல் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கும் போட்டியில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மண்டல அளவில் தேர்ச்சி பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
1991 முதல்” தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு” என்ற நிகழ்வை மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப பறிமாற்றத் துறையும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து கடந்த 30 ஆண்டுகளாக நடத்தி வருகின்றது.இந்தியா முழுவதிலிருந்தும் 10 முதல் 17 வயது வரையுள்ள குழந்தைகள் “ஆரோக்கியம் மற்றும் நலவாழ்விற்கான சுற்றுச்சூழல் அமைப்பைப் புரிந்து கொள்ளுதல்” என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிப்பார்கள். அந்த வகையில் வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேலந்pலைப்பள்ளி மாணவர்கள் முகமது பயாஸ், முகமது அப்சர் ஆகியோர் “உங்கள் சுற்றுச் சூழல் அமைப்பை அறிந்து கொள்ளுங்கள் எனும் கலைப்பில் ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்தனர். புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூயில் நடைபெற்ற போட்டிகளில் மாணவர்கள் முகமது பயாஸ் மற்றும் முகமது அப்சர் ஆகியோர் மண்டல அளவில் தேர்ச்சி பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.அறிவியல் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி, கந்தர்வ கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை,மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கவிவர்மன், பட்டிமன்ற நடுவர் மதுக்கூர் ராமலிங்கம், கவிஞர் முத்துநிலவன் உள்ளிட்ட எழுத்தாளர் சங்கத்தினர் மற்றும் பள்ளியின் துணைமுதல்வர் குமாரவேல், வழிகாட்டி ஆசிரியர்கள் கமல்ராஜ், சின்னையா, சத்தியராஜ், சித்திரைச் செல்வி ஆகியோர் வாழ்த்துக்களை தெவித்தனர்.