Loading Events
  • This event has passed.

மாவட்ட குழந்தைகள் நல குழுமம் நேரு யுவ கேந்திரா, புத்தாஸ் இளைஞர் நலன்,; விளையாட்டு மேம்பாட்டு அறக்கட்டளை, ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி இணைந்து நடத்திய பெண் குழந்தைகள் வன்கொடுமைக்கு எதிரான தற்காப்பு கலை விழிப்புணர்வு தொடர் நிகழ்வின் தொடக்க விழா ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமையேற்றார். மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா. மெர்சி. ரம்யா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பெண் குழந்தைகள் வன்கொடுமைக்கு எதிரான தற்காப்பு கலை விழிப்புணர்வு பற்றிய துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசும்போது” பொதுவாக பெண்கள் தங்களை யாராவது பாதுகாக்கவேண்டும் என எதிர்பார்க்காமல் நமக்கு நாமே பாதுகாப்பு என்கின்ற உணர்வை வளர்த்துக்கொள்ள வேண்டும். பெண்களை ஆண்களோ ஆண்களை பெண்களோ அணுகும்போது அவர்கள் முகமலர்ச்சியோடு விருப்பத்தை ஒத்துக்கொள்ளவில்லையென்றாலே அவர்கள் “நோ” சொல்வதாகவே அர்த்தம். எந்த சூழ்நிலை என்றாலும் அதை தைரியத்தோடு எதிர்கொள்ள வேண்டும். மேலும் நம் முகத்துக்கு நேராக ஒருவர் புகழ்வதையும் மற்றொருவர் இகழ்வதையும் ஒரே மாதிரி எடுத்துக்கொள்ள வேண்டும். புகழ்ச்சிக்கு மயங்கவோ, இகழ்ச்சிக்கு பதறவோ கூடாது. அப்படியிருந்தால் தான் குழந்தைகள் தங்கள் இலட்சியத்தை அடைவதில் கவனம் செலுத்த முடியும். இந்தப் பள்ளியில் உள்ள குழந்தைகள் மட்டுமல்ல தமிழ்நாட்டிலுள்ள எல்லாக் குழந்தைகளும் தங்களுக்கு சிரமம் என்று உணர்கின்றபோது தொடர்கொள்ளவேண்டிய எண். 1098. இதைத் தொடர்பு கொண்டால் மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்திலிருந்து உடனே உங்களை வந்தடைந்து உதவுவார்கள். ஆகவே பெண் குழந்தைகளும் ஆண் குழந்தைகளும் ஒருவருக்கொருவர் நட்பு பாராட்டி உதவும் கரங்களோடு வாழ்ந்திட வாழ்த்துகின்றேன்.என்று குறிப்பிட்டார்.

விழாவில் மாவட்ட கல்வி அலுவலர் தனியார் பள்ளிகள் ஜெயராஜ் நகர்மன்ற தலைவர் திலகவதி செந்தில், நேரு யுவகேந்திரா மாவட்ட அலுவலர் ஜோயல் பிரபாகர்,மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் சதாசிவம், மாவட்ட குத்துச்சண்டை கழக தலைவர் எஸ்விஎஸ் ஜெயகுமார் மாவட்ட அம்மெச்சர் தேக்வாண்டா தலைவர் டாக்டர் சலீம், அறிவியல் இயக்க தலைவர் வீரமுத்து, ராஜ்குமார், நேரு யுவகேந்திரா நமச்சிவாயம், பள்ளியின் துணைமுதல்வர் குமாரவேல் மற்றும் ஏராளமான குழந்தைகள் கலந்துகொண்டனர். முன்னதாக புத்தாஸ் வீரக்கலைகள் தலைவர் சேது கார்த்திகேயன் வரவேற்புரை வழங்கிட அண்ணா பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குநர் கே.ஏ. ரமே~; நன்றி கூறினார். நிகழ்வை ஆசிரியர் கணியன் செல்வராஜ் தொகுத்து வழங்கினார்.