Loading Events
  • This event has passed.

புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகள் நடத்திய அறியியல் மற்றும் கைவினை பொருட்கள் கண்காட்சி பார்வையாளர்களை பெரிதும் ஈர்த்தது. இக்கண்காட்சியினை பள்ளி முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி திறந்து வைத்து மாணவர்களின் அறிவியல் சிந்தனையையும் கலை பொருட்கள் மீதுள்ள ஆர்வத்தையும் கண்டு வியந்து பாராட்டினார். இதில் சந்திராயன் III மாதிரி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. சந்திராயன் III மாதிரி தொழில்நுட்பத்தோடு இயங்கும் முறையில் மாணவர்களால் உருவாக்கப்பட்டதால் பெற்றோர்கள் ஆர்வமுடன் கேட்டும் கண்டும் ரசித்தனர். தமிழர்களின் பழைய கலையான பொம்மலாட்டபொம்மைகள் மூலம் கதை சொல்லும் கைவினை பொருட்கள், வானத்தில் இருக்கும் கோள்களின் அமைப்பு மற்றும் பழைய சீன முறையில் உருவாக்கப்பட்ட எளிய கணித கருவி ஆகியவை கண்காட்சியில் இடம்பெற்று புதிய செய்திகளை பெற்றோர்கள் தெரிந்து கொள்ளவும் மாணவர்களுக்கு எளிமையான கற்றலுக்கும் இந்த அறிவியல் மற்றும் கைவினைப் பொருட்கள் கண்காட்சி பயனுள்ளதாக அமைந்தது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைவினைப்பொருட்களும் இருநூறுக்கு மேற்பட்ட அறிவியல் தொடர்பான பொருட்களும் மேலும் முந்நூறுக்கும் மேற்பட்ட வானியல், கணிதம், சுற்றுச்சூழல் தொடர்பான பொருட்களும் இக்கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன. இதனை 1500-க்கு மேற்பட்ட பெற்றோர்கள், பொதுமக்கள் கண்காட்சியை கண்டு மகிழ்ச்சியடைந்தார்கள். இந்நிகழ்வினை மாணவர்களே சிறப்பாக ஒருங்கிணைத்து நடத்தியது மேலும் பள்ளிக்கு பெருமை சேர்த்தது.