Loading Events
  • This event has passed.

புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் “வாசிப்போர் மன்றம்” தொடக்கவிழா நடைபெற்றது. மேனாள் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு அவர்களின் ஆலோசனைப்படி தமிழகத்திலேயே முதன்முதலாக மாணவர்களே ஒன்றுகூடி “வாசிப்போர் மன்றம”; தொடங்கினர். இந்த விழாவிற்கு பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமையேற்றார். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயலாளர் மற்றும் “துளிர்”; மாத இதழின் ஆசிரியர் எஸ்.டி. பாலகிருஷ்ணன் கலந்துகொண்டு மன்றத்தைத் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். அவர் பேசும்போது “ முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு அவர்களால் இன்றைக்கு தமிழகமெங்கும் தொடங்க வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டுள்ள வாசிப்போர் மன்றம்” என்ற சிந்தனைக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே செயல் வடிவம் கொடுத்தவர் பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள். “நோ புக் டே” எனும் புத்தகமில்லா தினம் கொண்டாடி பாடப்புத்தங்களைத் தாண்டி பல்வேறு நூல்களை வாசிக்கும் பழக்கத்தை மாணவர்களிடம் ஏற்படுத்திய பள்ளி இன்று தமிழகத்திலேயே முதன் முதலாக “வாசிப்போர் மன்றம்” தொடங்கிய பெருமை கொள்கிறது. இன்றைக்கு நூல்களை மதிப்புரை செய்த மாணவர்கள் மிகச் சிறப்பாக பேசினார்கள். தொடந்து எல்லா மாணவர்களும் நூல்களை வாசிப்பதிலும், படித்ததில் பிடித்ததை விவாதிப்பதிலும் கலந்துகொள்ள வேண்டும்”என்று பேசினார். வாசிப்போர் மன்றத்தின் தலைவராக அ.அ. அட்சயா, துணைத்தலைவராக உ.உ. உதயரிஷ்னியா, செயலாளர் மா. ஸ்ரீவர்சன், துணைச் செயலாளர்களாக மா.ரோகித், ச. தாரிகா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். நிகழ்வில் “இப்படிக்கு மரம்” என்ற நூலைப்பற்றி மா.ஸ்ரீவர்சன், “மூன்றாம் உலகப்போர்” எனும் தலைப்பில் மா. ரோகித், கவிஞர் தங்கம் மூர்த்தி கவிதைகள் எனும் நூல்பற்றி அ.அ. அட்சயா ஸ்ரீ, உங்களோடு மூன்று நிமிடங்கள்” என்ற தலைப்பில் உ. உதயரிஷ்னியா, “இறையன்பு தகவல் களஞ்சியம்” பற்றி ஷீபா, “கனவுகள்”,எனும் கதைகள் தாரிகா, “மந்திர கிலுகிலுப்பை” என்னும் கதைகள சர்விகா, கணிணி முல்லா கதைகள் என்ற நகைச்சுவை கதைகள் கா.லோகித் ஆகிய மாணவர்கள் குறுகிய காலத்தில் பள்ளி நூலகத்திலிருந்து நூல்களைப் பெற்று வாசித்து மதிப்புரை வழங்கினார்கள். விழாவில் பள்ளியின் துணை முதல்வர் குமாரவேல், வழக்கறிஞர் செந்தில்குமார், கல்வித்துறை கணேஷ், மகாத்மா ரவிச்சந்திரன், பேராசிரியர் கருப்பையா, ஒருங்கிணைப்பாளர் கௌரி, காசாவயல் கண்ணன் ஆகியோர் கலந்துகொண்டு புதிதாக பொறுப்பேற்ற வாசிப்போர் மன்ற நிர்வாகிகளை வாழ்த்தினர்.முன்னதாக ஒருங்கிணைப்பாளர் கோமதி பிள்ளை வரவேற்க நிறைவாக தமிழாசிரியர் கணியன் செல்வராஜ் நன்றி கூறினார். நிகழ்வை ஆசிரியர் உதயகுமார் தொகுத்து வழங்கினார்.