- This event has passed.
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கம் மற்றும் அமுதத் தமிழ் மன்றம் இணைந்து நடத்திய காமராசர் பிறந்த நாள் விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமையேற்றார். சிறப்பு விருந்தினராக புகழ்மிக்க ஆடிட்டர் புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் மூத்த தலைவர் எஸ்.பி. உலகப்பன் கலந்து கொண்டார். கௌரவ விருந்தினர்களாக மண்டல ஒருங்கிணைப்பாளர் ரோட்டரி மாவட்டம் 3000 ஜிஎஸ்எம். சிவாஜி கலந்துகொண்டார் புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் தலைவர் கருப்பையா(எ)கண்ணன்,செயலாளர் மருத்துவர் ஏ.சோமசுந்தரம், பள்ளியின் இயக்குநர் சுதர்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்வில் மாணவி தேவமித்ராவின் பரதநாட்டியம், மாணவி தாராணாவின் கர்மவீரர் பற்றிய உரை, மாணவர்கள் கௌசிக்,விஷ்ணு ஆகியோரின் காமராசர் பற்றிய பாடல், ஆகியவை காண்போரைக் கவரும் வண்ணம் சிறப்பாக அமைந்திருந்தது. சிறப்பு விருந்தினர் எஸ்.பி. உலகப்பன் சிறப்புரை நிகழ்த்தினார். அவர் பேசும்போது “படிக்காத மேதைக்கு விழா எடுக்க வேண்டியவர்கள் உண்மையில் பள்ளிப் பிள்ளைகள்தான். மாணவர்களாகிய நீங்களெல்லாம் கர்மவீரர் காமராசரை பாடங்களில், படங்களில் அறிந்திருப்பீர்கள். அவரை நேரடியாக சந்திக்கும் வாய்ப்புப் பெற்றவன் நான். நான் கல்லூரி படிக்கின்ற காலத்தில் எங்கள் பள்ளிக்கு வந்த பெருந்தலைவரை சந்தித்துப் பேசியது, அவரிடம் ஆட்டோகிராப் வாங்கியது இன்னும் என் நினைவுகளில் நிழலாடுகிறது. அந்த கர்ம வீரரின் கையெழுத்து வாங்கிய ஆட்டோகிராப் நோட்டை இப்போதுவரை பத்திரமாக வைத்திருக்கின்றேன். உங்கள் பள்ளி முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி; உங்களுக்கு எப்படி கல்வி புகட்டுகிறார் என்பதை இங்கே பேசிய, பாடல்கள் பாடிய நடனமாடிய குழந்தைகளின் மூலம் அறிந்து கொண்டோம். காமராசரின் கனவை நனவாக்கும் வண்ணம் நீங்கள் படித்து நல்ல நிலைக்கு வரவேண்டுமென்று வாழ்த்துகிறேன்” என்று பேசினார். விழாவில் ரோட்டரி மாவட்டம் 3000 மண்டல ஒருங்கிணைப்பாளர் ஜிஎஸ்எம் சிவாஜி வாழ்த்துரை வழங்கினார். பேச்சு,கட்டுரை,கவிதை, பாடல் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக காமராசரின் திருஉருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. காமராசர் வேடமணிந்து வந்;த மழலைகள் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தனர் விழாவில் புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கத் தலைவர் கருப்பையா(எ) கண்ணன், செயலாளர் டாக்டர் சோமசுந்தரம், இன்டராக்ட் சங்க பொறுப்பாளர்கள் வெங்கட் சூரஜ், ஹரிகரன், சபரிவாசன் மற்றும் கவிஞர் பீர்முகமது, பள்ளியின் துணைமுதல்வர் குமாரவேல் தமிழாசிரியர்கள் கலைச்செல்வி, மலர்விழி, சுபஷ்டி,காசாவயல் கண்ணன், உதயகுமார் மற்றும் எராளமான மாணவர்களும் ஆசிரியர்களும் கலந்துகொண்டனர் முன்னதாக மாணவி மாரீஸ்வரி வரவேற்க, நிறைவாக மாணவர் வெங்கடசுராஜ் நனறி கூறினார். நிகழ்வை மாணவி தாரிகா தொகுத்து வழங்கினார்.