- This event has passed.
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவன் பள்ளிக்கல்வித்துறை நடத்திய நீச்சல் போட்டியில் கலந்துகொண்டு மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளார். பள்ளியின் ஏழாம் வகுப்பு படித்துவரும் எம்.தனுஷ்கிருஷ்ணன் பள்ளிக்கல்வித்துறை நடத்திய நீச்சல் போட்டியில் கலந்துக்கொண்டு மாவட்ட அளவில் முதலிடம் பெற்று மாநில அளவிளான போட்டிக்கு தகுதிப் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளார். மாநில அளவிலான நீச்சல் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள மாணவன் எம்.தனுஷ்கிருஷ்ணனை பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம்மூர்த்தி அவர்கள் பரிசுகள் வழங்கி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார். மாநில அளவில் நீச்சல் போட்டிக்கு தகுதி பெற்ற மாணவனை துணைமுதல்வர் உள்ளிட்ட ஆசிரியர்களும், பெற்றோர்களும் மிகவும் பாராட்டினர்.