Loading Events
  • This event has passed.

 

புதுக்கோட்டை திருக்கோகர்ணம்  ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.  மேல்நிலைப்பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவி யாழினி மாவட்ட அளவில்  ஆய்வுக்கட்டுரை போட்டியில்  மூன்றாம் பரிசுபெற்று பள்ளிக்குப் பெருமைசேர்த்துள்ளார்.  தனியார் பள்ளிகளின் மாவட்டகல்வி அலுவலர் மாணவர்களின் திறன்களை வெளிக்கொணரும் வகையில் பல்வேறு போட்டிகளை நடத்தி பரிசுகள் வழங்கி வருகிறார். அந்த வகையில் மாவட்ட அளவில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு அவர்கள் விரும்பிய தலைப்புகளில் 100 பக்கம் ஆய்வுகட்டுரை எழுதும் போட்டியை அறிவித்தார். 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்ட போட்டியில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி ரா.யாழினி “கல்வி அன்றும் இன்றும்” என்ற தலைப்பில் எழுதிய ஆய்வு கட்டுரைக்கு மூன்றாம் பரிசாக ரூபாய் 5000 மற்றும் பாராட்டுச் சான்றிதழும் பெற்றுள்ளார்.