- This event has passed.
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் பழங்காலப் பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியை பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமையில் பள்ளியின் ஆலோசகர்; கவிஞர் அஞ்சலிதேவி தங்கம் மூர்த்தி தொடங்கி வைத்தார். இந்தக் கண்காட்சியில் இந்தத் தலைமுறை கண்டிராத பல அரிய பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. குறிப்பாக அந்தக் காலத்தில் பயன்படுத்திய நெல் குருது, மரத்தாலான உரல் உலக்கை முதலில் தயாரிக்கப்ட்ட பழைய கருப்பு வெள்ளை தொலைக்காட்சிப்பெட்டி, வானொலிப்பெட்டி, கடல் சங்குகள், புதுக்கோட்டை சமஸ்தானத்தால் வெளியிடப்பட்ட அம்மன் காசு, மற்றும் பழைய நாணயங்கள், அரிய வகை பழங்காலக் கத்திகள், பழைய டிரங்க் பெட்டிகள் இடம்பெற்றிருந்தன கண்காட்சியைத் தொடங்கி வைத்த பள்ளியின் ஆலோசகர் கவிஞர் அஞ்சலிதேவி தங்கம் மூர்த்தி கூறும்போது “ இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றுள்ள பொருட்களைப் பார்க்கி;ன்றபோது நமக்கு பழைய ஞாபகங்கள் வந்துவிடுகின்றன. மரத்தாலான பொருட்கள், பீங்கான் பொருட்கள், போன்ற அரிய வகை பொருட்களை இந்தத் தலைமுறை அறிந்துகொள்ள இந்தக் கண்காட்சி பெரிதும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. நெகிழிப் பயன்பாடுகளை தவிர்க்க வேண்டிய கட்டயாத்திலிருக்கின்ற இந்தக் காலததில் இதுபோன்ற பழைய புராதன பொருட்கள் மறுபடி பயன்பாட்டுக்கு வந்தால் இயற்கையை பாதுகாக்கலாம் என்று காண்போரை வியக்க வைத்தது கண்காட்சி என்று குறிப்பட்டார். இந்த பழங்காலப் பொருட்கள் கண்காட்சியை ஏற்பாடு செய்து நடத்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் நகரத்தலைவர், தொல்லியல் துறை மாவட்டப் பொறுப்பாளர் கவிஞர் சு. பீர்முகமது காட்சிப்படுத்தப்பட்டுள்ள பொருட்களைப் பற்றிய விளக்கங்களை பார்வையாளர்களுக்கு விளக்கினார். விழாவில் பள்ளியின் துணைமுதல்வர் குமாரவேல், ஒருங்கிணைப்பாளர்கள் கௌரி, கோமதிப்பிள்ளை ஆசிரியர்கள் கணியன் செல்வராஜ், உதயகுமார், கவிஞர்கள் சுரேஷ்மான்யா, புதுகைப்புதல்வன், ஈழபாரதி. பேராசிரியர் ராமன், மற்றும் ஏராளமான பொதுமக்களும் பெற்றோர்களும் கலந்துகொண்டு கண்காட்சியை பார்வையிட்டனர்.