- This event has passed.
புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கான உணவு பற்றிய விழிப்புணர்வுக் கூட்டம் பள்ளி முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. விழாவில் கோயமுத்தூர் பாம்பினோ பாஸ்தா புட் நிறுவனத்தின் மண்டல மேலாளர் விவேகானந்தன் கலந்துகொண்டு மாணவர்கள் சாப்பிட வேண்டிய உணவுப் பொருட்கள், தவிர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள் பற்றி விரிவாக உரையாற்றினார்.
அவர் பேசும்போது “ குழந்தைகள் நூடுஸ் போன்ற துரித உணவுகளை விரும்பிச் சாப்பிடுகிறார்களே அவர்களுக்கு புற்றுநோய் வருவதற்கு வாய்ப்பிருக்கிறதா என்று பெற்றோர்கள் கேட்கிறராகள். நூடுல்ஸ் சாப்பிட்டால் புற்று நோய் வருமா வராதா என ஆராய்ச்சி பண்ணிக்கொண்டிருக்காமல் குழந்தைகளுக்கு நூடுஸ்சை சமைத்துக் கொடுக்காமல் தவிர்த்தாலே அவர்கள் மாற்று உணவிற்கு பழகிக்கொள்வார்கள். பொதுவாகவே மைதா இல்;லாத உணவை வெகுசீக்கிரத்தில் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. அரிசி மற்றும் கோதுமையில் செய்யப்பட்ட உணவுகள் இரண்டு மணி நேரத்தில் செரிமானமாகி விடுகின்றன. ஆனால் மைதாவினால் தயாரிக்கப்பட்ட புரோட்டா செரிமானமாவதற்கு நாற்பத்தெட்டு மணி நேரம் வரைக்கும் ஆகிறது. நாம் சாப்பிடுகின்ற உணவுகள் எவ்வளவு விரைவாக செரிக்கின்றதோ அவ்வளவுக்கு உடல் ஆரோக்கியம் பெறும். வாரம் இரண்டு முறை உணவில் கீரை சேர்த்துக்கொண்டால் பெண்களுக்கு இரும்புச் சத்து தொடர்ந்து கிடைத்து உடல் பலமாகும். ஆகவே எளிதில் செரிமானமாகக்கூடிய சேமியா, பாஸ்தா, ரவை உப்புமா மற்றும் சிறுதாணிய உணவுகளை குழந்தைகளுக்கு தாய்மார்கள் சமைத்துக் கொடுக்க வேண்டும். மாணவர்கள் தேர்வுக் காலங்களில் கண்விழித்து அதிக நேரம் படிக்க வேண்டியிருப்பதால் உடல் சோர்வை தவித்திட சத்தான உணவுகளை மட்டுமே சமைத்துக் கொடுத்து குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்” என்று பேசினார். பின்னர் பெற்றோர்களின் கேள்விகளுக்கு விளக்கமளித்தார் நிகழ்வில் கலந்துகொண்ட பெற்றோர்களுக்கு பாம்பினோ பாஸ்தா நிறுவன உணவுப் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் பள்ளியின் துணை முதல்வர் குமாரவேல், ஒருங்கிணைப்பளர் கௌரி, மேலாளர் ராஜா,ஆசிரியர்கள் உதயகுமார், கணியன் செல்வராஜ், காசாவயல் கண்ணன், ராமன், உடற்கல்வி ஆசிரியர்கள் நீலகண்டன், விசாலி, தஞ்சாவூர் தொழிலதிபர் செல்வம், பாம்பினோ பாஸ்தா நிறுவனத்தைச் சார்ந்த மணிசேகரன், ஆனந்த், பிரதீப் மற்றும் ஏராளமான பெற்றோர்களும் மாணவர்களும் கலந்துகொண்டனர். மாணவர்களுக்கான உணவு முறைகள் பற்றிய இந்தக் கூட்டம் மிகவும் பயனுள்ளதாத அமைந்ததாக பெற்றோர்கள் வெகுவாகப் பாராட்டினர்.