- This event has passed.
புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மாநில அளவிலான நீச்சல் போட்டியில் வென்று சாதனை படைத்துள்ளனர். ஈரோட்டில் நடைபெற்ற அக்வா சேலஞ்ச்-2023 என்ற மாநில அளவிலான நீச்சல் போட்டியில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர். அதில் தனுஷ் கிருஷ்ணன் பிஆர் 100மீ பிரிவில் இரண்டாம் பரிசும், சந்தோஷிகா பிஆர் 250 மீ பிரிவில் மூன்றாம் பரிசும், பிளை 50 மீ பிரிவில் இரண்டாம் பரிசும், தேவிகா கிரேடு 4ல் இரண்டாம் பரிசும் பெற்று மாநில அளவிலான நீச்சல் போட்டியில் வென்று பள்ளி;க்கு பெருமை சேர்த்துள்ளனர். நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று பள்ளிக்கு வந்த மாணவர்களை பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி பரிசுகள் வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார். வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பள்ளியின் துணை முதல்வர் குமாரவேல் மற்றும் ஆசிரியப் பெருமக்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.