- This event has passed.
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களின் அறிவுத் திறனைஇ ஆங்கில அறிவை வெளிக்கொணரும் வகையில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு அதற்கான பரிசளிப்பு விழா கொண்டாடப்பட்டது. பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமையில் பல்வேறு பள்ளிகளின் கல்லூரிகளின் ஆங்கில ஆசிரியர்கள் நடுவர்களாக பொறுப்பேற்று குழந்தைகளின் அறிவாற்றலை கண்டும் கேட்டும் நல்ல தீர்ப்புகள் வழங்கினர். அதன் தொடர்ச்சியாக பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் பல லட்சம் செலவில் பரிசு பொருட்கள் விலை மதிக்க முடியாத சான்றிதழ்கள் கழுத்து வலிக்கும் அளவு வெயிட்டான மெடல்கள் என 1500 பரிசுகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு அரசு “ஆசிரியர் மனசுத் திட்டம்” மாநில ஒருங்கிணைப்பாளர் சிகரம் சதீஷ்குமார் கலந்துகொண்டு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.