Loading Events
  • This event has passed.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு மழலைக் குழந்தைகளுக்கான சேர்க்கை நடைபெற்றது. நல்ல நாளில் நல்ல நேரத்தில் தங்கள் குழந்தைகளின் சேர்க்கைக்காக ஆர்வமுடன பெற்றோர்கள் வந்திருந்தனர். பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி மழலைக்கு குழந்தைகளை வரவேற்று அழகிய மாலைகள் அணிவித்து இனிப்புகள் வழங்கி சரஸ்வதி படத்தின் முன் குழந்தைகளை நெல்லில் எழுத வைத்தார். இதுகுறித்து பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி கூறும் போது “.எத்தனையோ தொழில் நுட்பம் வளர்ந்துவிட்ட பின்னும் இன்னும் நெல்லில் எழுதி கல்வியைத் தொடங்கும் முறை பண்பாடு மாறாமல் மரபு மாறாமல் அப்படியே இன்றும் தொடர்கின்றது. விஜய தசமி என்பது வெற்றியை குறிக்கும் நாள். இன்று தொடங்குகின்ற எந்தக் காரியமும் வெற்றி பெறும் என்பதாலேயே இன்று வாழை இலையில் நெல் பரப்பி அதில் அகரம் எழுத வைத்து வாழையடி வாழையாக இந்தக் கல்வி தொடரவேண்டும் என பெற்றோர்கள் விரும்புகின்றார்கள். தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கு அப்பா அம்மா, தாத்தா, பாட்டி தாய்மாமன்கள் என குடும்பம் குடும்பமாக பள்ளிக்கு வருகை தந்து திருவிழாவாகவே இந்த நாள் கொண்டாடப்படுகிறது என்று குறிப்பிட்டார்”. பள்ளியில் புதிய சேர்க்கைபெற்ற மழலைக்குழந்தைகள் பள்ளி ஸ்மார்ட் போர்டுவசதிகளுடன் கூடிய குளிரூட்டப்பட்ட வகுப்பறைகளைப் பார்வையிட்டனர். மழலைக்குழந்தைகள் பள்ளி வளாகத்தில் விiளாயாடிக் களித்தனர் இந்தநிகழ்வில் துணைமுதல்வர் குமாரவேல், ஒருங்கிணைப்பாளரகள் கௌரி, அபிராமசுந்தரி, வரலெட்சுமி, கோமதி பிள்ளை மற்றும் மழலையர் வகுப்பாசிரியர்கள் புதிய சேர்க்கை பெற்ற குழந்தைகளை வாழ்த்தினர்.