- This event has passed.
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் முழுதும் மாணவர்களே நடத்திய வாசிப்போர் மன்றக் கூட்டம் நடைபெற்றது. நிகழ்வுக்கு பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமையேற்றார். இதில் “சிறார் எழுத்தாளர் விழியன் படைப்புலகம்“ என்ற தலைப்பில் மாணவ மாணவிகள் விழியனின் கதைகளைப் படித்து வந்து மாணவர்களிடையே பகிர்ந்து கொண்டனர்.
ஆண்டனி ஜெனிசா “பெரிய்ய்ய” தாரணா “இந்திரன்” மாரீஸ்வரி மற்றும் கௌசிக் “கசியும் மணல்”, லோகித் “ மகிழ் பதின்” , தாரிகா “டம்ரூ” தாரிகா “மியாம்போ” தருண் வர்சன் “மாடரிகா”, கசானா இஜ்ஜத் “பென்சில்களின் அட்;டகாசம்”, தௌபிகா “வளையல்கள் அடித்த லூட்;டி, ஆண்டோ ஜெய்சன் “மியாம்போ” ஆகிய தலைப்புகளில் உரையாற்றினர்.
சிறப்பு விருந்தினராக எழுத்தாளர் விழியன் அவர்களின் நண்பர் “விதைக்கலாம்” நிறுவனர் கவிஞர் மலையப்பன் கலந்து கொண்டு சிறப்பரையாற்றினார்.அவர் பேசும்போது “ஒவ்வொரு குழந்தையும் கதைகளை உள்வாங்கிக்கொண்டு கதாபாத்திரமாகவே மாறி கதைகளை சொன்னார்கள். நான் விழியனின் கதைகளை நிறைய கூட்டங்களில் சொல்லியிருக்கின்றேன். இங்கே பேசிய குழந்தைகள் மாதிரி ஒரு முறை கூட இத்தனை அருமையாக சொன்னது கிடையாது. வெங்கடேஸ்வரா பள்ளி குழந்தைகளுக்கு பாராட்டுகள் என்று தெரிவி;த்தார். முன்னதாக வாசிப்போர் மன்ற நிர்வாகிகளாக தலைவர் த. மதுஸ்ரீ, செயலாளர் எஸ்.தாரிகா, துணைத்தலைவர் ஹரிபிரியா, துணைச்செயலாளர் ஆண்டனி ஜெனிசா மற்றும் ஒருங்கிணைப்பாளராக மாணவி சிவானி, மாரீஸ்வரி, தருண்வர்ஷன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
வாசிப்போர் மன்றக் கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து மாணவர்களுக்கும் இந்து தமிழ்திசை நாளிதழ் வழங்கப்பட்டது. அதில் மாயாபஜார் என்ற பகுதி தங்களை கவர்வதாக மாணவர்கள் குறிப்பிட்டனர்.
வாhசிப்போர் மன்ற விழாவில் பள்ளியின் இயக்குனர் சுதர்சன், துணைமுதல்வர் குமாரவேல் கலந்துகொண்டு மாணவர்களை பாராட்டின்ர் முன்னதாக மாணவி மதுஸ்ரீ வரவேற்க, சிவானி நன்றி கூறினார்.
நிகழ்வினை மாணவி தாரிகா தொகுத்து வழங்கினார். ஆசிரியர்கள் காசாவயல் கண்ணன், உதயகுமார், அமர்நாத் கலைச்செல்வி, மலர்விழி, சுபஸ்டி ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களை பாராட்டினர்.