Loading Events
  • This event has passed.

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் யுகேஜி மாணவர்கள் களப்பயணமாக உழவர் சந்தைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மழலைக் குழந்தைகள் உழவர் சந்தையின் காய்கறிக் கடைகள் ஒவ்வொன்றுக்கும் சென்று அவரைக் காய், பீர்க்கங்காய் பாகற்காய், கத்தரிக்காய் போன்ற காய்கறிகளின் பெயர்களையும் விற்பனை செய்வோரிடம் ஆர்வமாய்க் கேட்டுத் தெரிந்து கொண்டனர். விற்பனை செய்யும் கிராமத்து மக்களும் அன்போடு வரவழைத்து அவர்களின் ஆர்வத்தை பாராட்டி, நெல்லி, கொய்யா, வெள்ளரிக்காய், வாழைப்பழம் ஆகிய பழங்களை குழந்தைகளுக்கு கொடுத்து மகிழ்ந்தனர். பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி “ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது” என்பதைப்போல பாடங்களில் படங்களில் உள்ள பொருட்களை நேரடியாக கண்டு மாணவர்கள் அறிந்துகொள்ள இதுமாதிரி களப்பயணங்களை தொடர்ந்து எங்கள் பள்ளியில் முன்னெடுக்கின்றோம்” என்று குறிப்பிட்டார். உழவர் சந்தைக் களப்பயணத்தில் ஒருங்கிணைப்பர்ளர் மீனாட்சி, ஆசிரியைகள் சந்திரகாலா, ரீஜல்மேரி, முத்துமணி மற்றும ஆசிரியர்கள், கமல்ராஜ், உதயகுமார், ராமன, ஆகியோர் கலந்துகொண்டு குழந்தைகளை பத்திரமாக களப்பயணத்துக்கு அழைத்துச்சென்று வந்தனர்.