புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மாணவ மாணவிகளுக்கு மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றனர். குழந்தைகள் தினத்தை புத்தகமில்லா தினமாக கொண்டாடும் வகையில் மாணவர்கள் வண்ண வண்ணப் பட்டாம்பூச்சிகளாய் பள்ளிக்கு வந்தனர். பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி மாணவர்களுக்கு மலர்க்கொத்து கொடுத்து இனிப்புகள் வழங்கி குழந்தைகள் தின வாழ்த்துகளைத் தெரிவித்தார். வாசல் தொடங்கி வரிசையாக நின்ற ஆசிரியர்கள் மாணவர்களை வரவேற்று குழந்தைகள் தின வாழ்த்துகளைத் தெரிவித்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த மேனாள் பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்களின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்யப்பட்டது. தொடர்ந்து பள்ளிக் குழந்தைகளை மகிழ்விக்கும் பொருட்டு ஆசிரியர்கள் கூறிய சிறார் கதைகள், மற்றும் பாடல்கள் கண்ணைக்கவரும் நடனங்கள், நடைபெற்றன. விழாவில் ஆசிரியர்களிள் “வகுப்பறை நாடகம்” அனைவரின் பாராட்டைப் பெற்றது. தொடர்ந்து வகுப்பறைகளில் இன்றைய நாள் முழுவதும் கதைகள், பாடல்கள். நகைச்சுவைக் காட்சிகள் ஸ்மார்ட் போர்டுகளில் திரையிடப்பட்டன. நிகழ்வில் பள்ளியின் இயக்குநர் சுதர்சன் மற்றும் பள்ளியின் துணைமுதல்வர் குமாரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர் மேலாளர் ராஜா, ஆசிரியர்கள் உதயகுமார், காசாவயல் கண்ணன் மற்றும் ஆசிரியப்பெருமக்கள் மாணவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். முன்னதாக ஒருங்கிணைப்பாளர் மீனாட்சி வரவேற்க, நிறைவாக ஒருங்கிணைப்பாளர் பாலசங்கர் நன்றி கூறினார். நிகழ்வை ஒருங்கிணைப்பாளர் கௌரி மற்றும் ஆசிரியை நர்மதா தேவி தொகுத்து வழங்கினர்.