- This event has passed.
புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் வாசிப்போர் மன்றம் சார்பாக மேனாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் நினைவு நாளில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
27..07.2023 அன்று பள்ளியின் வாசிப்போர் மன்றம் சார்பாக அவரின் திருவுருவப்படத்திற்கு மாணவர்கள்; செலுத்தினர்.நிகழ்வில் பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி கலந்துகொண்டு அக்னி நாயகர் அப்துல் கலாம் அவர்களின் நினைவுகளை மாணவர்களிடையே பகிர்ந்துகொண்டார். இதுபோல தேசத் தலைவர்களின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாட்களில் நடத்தப்படும் நிகழ்வுகளால் மாணவர்களுக்கு தலைவர்களின் தியாகங்கள், வாழ்நாள் அனுபவங்களை அறிந்துகொண்டு வாழ்வில் முன்னேற வாய்ப்பாக அமைகின்றது என்று குறிப்பிட்டார். ஏராளமான மாணவர்களும் ஆசிரியப்பெருமக்களும் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினர்.