- This event has passed.
புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் வாசிப்போர் மன்றம் சார்பாக முத்துலெட்சுமி அம்மையாரின் நினைவு நாளில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பகுதியில் ஜுலை 30 1888-ல் பிறந்து இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் பட்டம் பெற்று, சென்னை மாகாண சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்ட்டு, சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயராகவும் விளங்கி இந்திய பெண்கள் சங்கத்தின் தலைவராகவும் பதவி வகித்தவர் டாக்டர் முத்துலெட்சுமி அம்மையார் அவர்கள். தேவதாசி முறை ஒழிப்பு, பெண்கள் சொத்துரிமை, இருதாரச் தடைச் சட்டம், பாலியல் விவாக தடைச் சட்டம் போன்ற சட்டங்கள் நிறைவேறக் காரணமாக இருந்தவர். சென்னை அடையாரில் அனாதைக் குழந்தைகளுக்காக அவ்வை இல்லத்தைத் தொடங்கியவர் அடையாறு புற்றுநோய் மருத்துவமனை உருவாகக் காரணமாக இருந்தவர்.
“முதலில் மருத்துவம் படிச்சாரு முத்துலெட்சுமி அவர் பேரு”
என்ற புதுக்கோட்டை நம் புகழ்க்கோட்டை என்ற புகழ்பெற்ற பாடலை எழுதிய பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களின் வழிகாட்டுதலின் படி டாக்டர் முத்துலெட்சுமி அம்மையார் நினைவு நாளான 22.07.2023 அன்று பள்ளியின் வாசிப்போர் மன்றம் சார்பாக அவரின் திருவுருவப்படத்திற்கு மாணவர்கள்; மலரஞ்சலி செலுத்தினர்.நிகழ்வில் பள்ளியின் துணைமுதல்வர் குமாரவேல், மேலாளர் ராஜா, ஆசிரியர்கள் காசாவயல் கண்ணன், கணியன் செல்வராஜ், உதயகுமார் மற்றும் ஏராளமான ஆசிரியப்பெருமக்கள் கலந்துகொண்டனர்.