Loading Events
  • This event has passed.

புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் இன்று களப்பயணமாக அருங்காட்சியகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பள்ளியின் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் அருங்காட்சியத்தை பார்வையிட்டனர். புதுக்கோட்டைஅருங்காட்சியகம் 1910 ஆண்டு புதுக்கோட்டையை ஆண்ட தொண்டைமான் மன்னர்களால் தொடங்க்பெற்ற பழமையான அருங்காட்சியகமாகும். இங்கு பதப்படுத்தப்பட்ட பல்லிகளும் பாம்புகளும் தொல்லியல் ஆய்வுகளில் கண்டெடுக்கப்ட்ட அரியவகைப் பெர்ருட்களும் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. பார்வையாளர்களைக் கவரும் வண்ணம் நுழைவாயிலில் மிகப்பிரமாண்டமான டைனோசர் வரவேற்கிறது. காட்சிப்படுத்தப்பட்டிருந்த அனைத்துப் பொருட்களையும் பொருமையுடன் கண்டு, அவற்றுக்கான விளக்கங்களை ஆசிரியர்களிடம் கேட்டும் பயனடைந்தனர் மாணவர்கள். பாடப்புத்தகங்களைத் தாண்டி வெளியுலக அறிவை பெற வேண்டுமென்ற நோக்கத்தில் ஒவ்வொரு ஆண்டும் வயல்வெளி, நூலகம், உழவர் சந்தை, ரயில்வே நிலையம், அஞ்சலம் என பல்வேறு இடங்களை பள்ளி மாணவர்கள் பார்வையிட அழைத்துச் செல்கிறோம் என்கிறார் பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி. இந்த நிகழ்வில் ஒருங்கிணைப்பாளர் கோமதி பிள்ளை, ஆசிரியர்கள் உதயகுமார், ராமன், ரம்யா, கலையரசி, ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களை அருங்காட்சியகம் பார்வையிட உதவினர்.