Loading Events
  • This event has passed.

புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப் பள்ளியின் முதல் வகுப்பு மாணவர்கள் களப்பயணமாக பிரகதாம்பாள் கோயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்ற களப்பயணங்கள் மூலம் மாணவ மாணவிகளுக்கு கல்வியறிவோடு வெளியுலக அனுபவங்கள், நடைமுறை வாழ்க்கையில் அறிந்துகொள்ள வேண்டியவைகளை அறிமுகப்படுத்தும் வகையில் இந்த ஆண்டு ஸ்ரீ பிரகதாம்பாள் கோயிலுக்கு களப்பயணமாக முதல் வகுப்பு மாணவ மாணவிகள் அழைத்துச்செல்லப்பட்டனர். மாணவர்கள் ஆர்வமுடன் குடை வரைக்கோயிலின் சிற்பங்களைக் கண்டுகளித்தனர். கோயில் அர்ச்சகர் குழந்தைகளுக்கு ஆர்முடன் எல்லா இடங்களையும் சுற்றிக் காட்டினார். மேலும் காமதேனுவுக்கு தேவேந்திரனால் சாபம்பெற்று பூலோகம் வந்து கபில மகரிஷியின் ஆலோசனைப்படி கங்கையின் புனிதநீரை காதில் கொண்டுவந்து ஈஸ்வரனுக்கு அபிஷேகம் செய்து சாபம் நீங்கிய திருத்தலம் திருக்கோகர்ணம் ஸ்ரீ பிரகதாம்பாள் கோயில் என்ற கோயில் தலவரலாறையும் குழந்தைகள் ஆர்வமுடன் கேட்டுத் தெரிந்துகொண்டனர். குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று என்கிற மாதிரி கூட்டமாய் குழந்தைகள் கோயிலில் வலம் வந்தது காண்போரை வியக்க வைத்தது. இந்தக் களப்பயணத்தில் ஓருங்கிணைப்பாளர் கோமதி பிள்ளை, ஆசிரியைகள் சிவதர்சினி, யுவராணி, சரண்யா, புவனேஸ்வரி. சரசு, பாரதி, மற்றும் ஆசிரியர்கள் உதயகுமார், ராமன், காசாவயல் கண்ணன் ஆகியோர் கலந்துகொண்டு களப்பயணத்தை சிறப்பித்தனர்.