- This event has passed.
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் ஆண்டுவிழா நடைபெற்றது. விழாவில் மக்கள் இசை கலைஞர்கள் செந்தில் கணேஷ் ராஜலெட்சுமி குழுவினர் வழங்கிய இன்னிசை நிகழ்;ச்சி நடைப்பெற்றது. பள்ளி மாணவர்களின் பாடல்கள் மற்றும் கீபோர்டு இசை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களால் பெரிதும் பாராட்டப்பட்டன. விழாவிற்கு அழகப்பா பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் எஸ்.சுப்பையா தலைமையேற்றார். சிறப்பு விருந்தினர்களாக நகைச்சுவை பேரரசு, பட்டிமன்ற நடுவர் கு. ஞானசம்பந்தன் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு ஆகியோர் கலந்துகொண்டனர். விழாவில் பள்ளி மாணவர்களுக்கு விருதுகளும் சான்றிதழ்களும் சிறப்பு விருந்தினர்களால் வழங்கப்பட்டன. பள்ளியின் ஆண்டுமலர் ‘விங்ஸ்” அரண்மனை ராணி;களால் பல்லக்கில் கொண்டுவரப்பட்டது மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு ஆண்டுமலரை வெளியிட முனைவர் நகைச்சுவை பட்டிமன்ற நடுவர் கு. ஞானசம்பந்தன் பெற்றுக்கொண்டார். விழாவில் விஜய் குழுமத் தலைவர் முருகானந்தம், மக்களிசைப் பாடகர்கள் செந்தில்கணேஷ் ராஜலெட்சுமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.