Loading Events
  • This event has passed.

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் ஆண்டுவிழா நடைபெற்றது. அழகப்பா பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் டாக்டர் சுப்பையா தலைமை ஏற்க சிறப்பு விருந்தினராக தேசிய விருதுபெற்ற திடைப்பட நடிகர் தம்பி ராமையா கலந்துகொண்டார். “ஆசிரியர் மனசு” திட்ட ஒருங்கிணைப்பாளர் சிகரம் சதீஷ்குமார், விஜய் குழுமத் தலைவர் முருகானந்தம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி முன்னிலையில் “விங்ஸ்” எனும் ஆண்டு மலரை சிறப்பு விருந்தினர் தம்பி ராமையா வெளியிட அழகப்பா பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் பெற்றுக் கொண்டார்.

 

விழாவில் சிறப்புரையாற்றிய தம்பி ராமையா பேசும்போது “பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பாராட்டவும், கொண்டாடவும் வேண்டும். வீட்டிலிருக்கும் பெரியவர்களை மதிக்கவும் அவர்கள் சொற்படிக் கேட்கவும் வேண்டும். மூத்தோரை மதித்து நடக்கும் குழந்தைகள்தான் வாழ்க்கையில் வெற்றி பெறுவார்கள். இன்றளவும் நான் என் பெற்றொரை வணங்கி விட்டுத்தான் என் பணிகளைத் தொடங்குகிறேன். குழந்தைகள் தாய் தந்தையரை, ஆசிரியரை மதிக்க வேண்டும். கல்வியில் சிறந்து விளங்குவது மட்டுமல்ல பிற கலைகளிலும் வல்லுனர்களாக வரவேண்டும். ஒவ்வொரு குழந்தையிடத்திலும் ஒரு மாபெரும் திறமை ஒளிந்து கிடக்கிறது. அதை பெற்றோர்கள் கண்டுபிடித்து ஊக்குவிக்க வேண்டும்.  கல்வியில் உயர்ந்து மதிப்பு மிக்கவர்களாக மாணவர்கள் மாற வேண்டும். நான் பல பள்ளி ஆண்டுவிழாவிற்கு சென்றிருக்கின்றேன். ஆனால் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தங்கள் தனித்திறமைகளை வளர்த்துக்கொண்டு தேசிய அளவில் வெற்றிபெறுவதை நினைத்து நானும் புதுக்கோட்டைக்காரன் என்பதில் பெருமைப்படுகிறேன்” என்று குறிப்பிட்டார்.

 

கடந்த 2022-23ஆம் கல்வியாண்டில்  மேல்நிலைப்பள்ளித் தேர்வில் நூற்றுக்கு நூறு பெற்றுத்தந்த சாதனை ஆசிரியர்கள் அபிராம சுந்தரி, ஆறுமுகம், துரக்காதேவி, சுகுனா ஆகிய ஆசிரியர்கள் ரொக்கப்பரிசு வழங்கிப் பாராட்டப்பட்டனர். கடந்த கல்வியாண்டு முழுவதும் விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வந்த ஆசிரியை  சுசீலா மற்றும் விங்ஸ் ஆண்டுமலரின் ஆசிரியர் காசாவயல் கண்ணன் ஆகியோர் விருதுகொடுத்து பாராட்டப்பட்டனர். சென்ற கல்வியாண்டில் 10, 12 ஆம் வகுப்புகளில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற பள்ளி மாணவர்கள், மாநில அளவில் பல வெற்றிகளைப் பெற்ற மாணவர்கள் சிறப்பு விருந்தினர்களால் விருதுகள் கொடுத்து கௌரவிக்கபட்டனர்.

 

விழாவில் பள்ளியின் ஆலோசகர் கவிஞர் அஞ்சலிதேவி தங்கம் மூர்த்தி, நிர்வாக இயக்குனர் நிவேதிதா மூர்த்தி, பள்ளியின் ஆலோசகர் நாகா அதியன், துணை முதல்வர் குமாரவேல், வழக்கறிஞர் செந்தில்குமார், பேராசரியர்கள் அய்யாவு மற்றும் கருப்பையா பாவேந்தர் பள்ளி காசிநாதன், மகாத்மா ரவிச்சந்திரன், கல்வித்துறை கணேஷ், கவிஞர் பீர்முகமது, புதுகைப் புதல்வன், அனைத்து ரோட்டரி சங்க உறுப்பினர்கள், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தினர், அறிவியல் இயக்க தலைவர்கள், புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கியை சேர்ந்த பள்ளி முதல்வர்கள், தாளாளர்கள் மற்றும் பத்திரிக்கை தொலைக்காட்சி நிருபர்கள் ஆகியோர் நிகழ்வில் கலந்துகொண்டு குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளைப் பாராட்டி வாழ்த்தினார்கள். பள்ளியின் ஒருங்கிணைப்பாளர்கள் கௌரி, அபிராமசுந்தரி, வரலெட்சுமி, கோமதிப்பிள்ளை, மேலாளர் ராஜா, ஆசிரியர்கள் உதயகுமார், கணியன் செல்வராஜ், ராமன், நீலகண்டன், மணீஷ் ஆகியோர் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

 

முன்னதாக பள்ளியின் ஆலோசகர் கவிஞர் நாகா அதியன் வரவேற்க நிறைவாக துணை முதல்வர் குமாரவேல் நன்றி கூறினார். நிகழ்வினை ஆசிரியர்கள் காசாவயல் கண்ணன், ஆனந்தி, சுபஷ்டி ஆகியோர் தொகுத்து வழங்கினர்.