Loading Events
  • This event has passed.

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவினை பள்ளியின் தங்கக்கூடு எனும் முன்னாள் மாணவர்கள் அமைப்பபினர் இணைந்து நடத்தினர். விழாவிற்கு பள்ளியின் ஆலோசகர் அஞ்சலிதேவி தங்கம் மூர்த்தி தலைமையேற்றார். பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்து பேசினார். சிறப்பு விருந்தினர்களாக புதுக்கோட்டை செந்தில் மருத்துவமனை மகப்பேறு மருத்துவர் டாக்டர் ஜெயலெட்சுமி என்ற சுகன்யா, புதுகை மருத்துவக்கல்லூரி எலும்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர் டாக்டர் ராஜ்மோகன் ஆகியோர் கலந்துகொண்டனர். விழாவில் மாணவர்களின் தனித்திறனை வெளிப்படுத்தும் விதமாக வாய்ப்பாட்டு, கீபோர்டு. கராத்தே, யோகா, பாக்ஸிங், நடனம் ஆகிய நிகழ்ச்சிகளை பெற்றோர்கள் கண்டு பாரட்டினர். சிறப்பு விருந்தினர் டாக்டர் ஜெயலெட்சுமி பேசும்போது “ இந்தப் பள்ளியில் புதன்கிழமைதோறும் தனித்திறன் வகுப்பு நடத்தப்படுவதாக அறிந்தேன். இங்கே நிகழ்ந்த யோகா, கராத்தே, பாக்ஸிங், வாய்ப்பாட்டு, கீபோர்டு செய்முறைகளைக் மிகவும் தேர்ந்த முறையில் நடத்தப்பட்டன. பொதுவாக இன்றைக்கு பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் பிராய்லர் கோழிகளாகவே வளர்க்கப்படுகிறார்கள். அதிகமதிப்பெண் பெற்று உயர்கல்விக்குச் செல்லும் அவர்களுக்கு வெளியுலக பழக்க வழக்கங்கள் எதுவும்; தெரிந்திருப்பதில்லை. வகுப்பில் ஆசிரியர் ஏதாவது அறிவுரை சொன்னாலோ, கண்டித்தாலோ உடனே தவறான முடிவை நோக்கிச் செல்லும் அளவுக்கு மனவலிமை குன்றியவர்களாக இருக்கின்றார்கள். ஆனால் வெங்கடேஸ்வராவில் பயிலும் மாணவர்களுக்கு தனித்திறன் பயிற்சிகள் வழங்கப்படுவதால் எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் மனவலிமை பெற்றவர்களாக உருவாகின்றார்கள். பள்ளியின் முதல்வருக்கும் ஆசிரியர்களுக்கும் நன்றியும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றேன்” என்று பேசினார்.