Loading Events
  • This event has passed.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு

விருதுகள் வழங்கும் விழா

 

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கான விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. எல்கேஜி முதல் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு விருதுகளும் பதக்கமும் வழங்கப்பட்டன. விழாவிற்கு பள்ளியின் ஆலோசகர் கவிஞர் அஞ்சலிதேவி தங்கம் மூர்த்தி தலைமையேற்றார். சிறப்பு விருந்தினர்களாக அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை மற்றும் மீட்புமைய தலைமை மருத்துவர் கார்த்திக் தெய்வநாயகம்;, பேராசிரியர் அய்யாவு  மற்றும் புதுக்கேட்டை தமிழ்சங்க செயலாளர் கவிஞர் மகாசுந்தர் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்கள். இந்த கல்வியாண்டில் சிறந்த மதிப்பெண்கள்  பெற்ற மாணவர்கள் மற்றும் கலை மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வகுப்பு வாரியாக விருதும், பதக்கம் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. சிறப்பு விருந்தினர் மருத்துவர் கார்த்திக் தெய்வநாயகம் பேசும்போது “குழந்தைகள் தங்களின் பெரும்பாலான நேரங்களை பள்ளியிலேயே செலவிடுகின்றனர். இந்தப்பள்ளியைப் பொருத்தவரை பள்ளி முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள் அதிக அக்கறையோடு குழந்தைகளை கவனித்துக் கொள்வதோடு அவர்களுக்கு கல்வியோடு ஒழுக்கத்தையும் சேர்த்து கற்றுக்கொடுக்கின்றார். பாடப்புத்தகங்கள் தாண்டி மாணவர்களின் தனித்திறனைக் கண்டறிந்து அந்தப் பயிற்சிகளைக் கொடுப்பது பன்முகத்திறனோடு மாணவர்கள் முன்னேற வழிவகுக்கிறது. பெற்றோர்கள் அதிக நேரத்தை குழந்தைகளுடன் செலவிட்டு பொறுப்போடு வளர்க்க வேண்டும் என்று கதை சொல்லி விளக்கினார். விழாவில் அரசு சிறப்பு வழக்கறிஞர் செந்தில்குமார்,  கல்வித்துறை வெங்கடசுப்பிரமணியன், கவிஞர் பீர்முகமது, பாவேந்தர் பள்ளி காசிநாதன், மகாத்மா ரவிச்சந்திரன், பேராசிரியர் கருப்பையா, கவிஞர் மா.செல்லத்துரை, யோகா பாண்டியன், சேது கார்த்திகேயன், யோகா புவனேஸ்வரி பள்ளியின் துணைமுதல்வர் குமாரவேல், ஒருங்கிணைப்பாளர்கள் கௌரி. வரலெட்சுமி, கோமதிப்பிள்ளை ஆசிரியர் உதயகுமார், மேலாளர் ராஜா ஆகியோர் கலந்துகொண்டு விருதுபெற்ற மாணவர்களை வாழ்த்தினர். முன்னதாக பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி வரவேற்க நிறைவாக ஒருங்கிணைப்பாளர் கோமதிபிள்ளை நன்றி கூறினார். விழாவினை ஆசிரியைகள் அட்சயா, சுபஸ்டி ஆகியோர் தொகுத்து வழங்கினர்.