Loading Events
  • This event has passed.

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தினம் முன்னாள் பிரதமர் நேரு அவர்களின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. விழாவுக்கு பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமையேற்றார்.
பள்ளியின் வாசல் பலூன் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு குழந்தைகளை வரவேற்று ஆசிரியப்பெருமக்கள் இனிப்புகளை வழங்கி மகிழ்வித்தனர் நேருமாமா வேடமணிந்து வந்த குழந்தைகள் ஜவகர்லால் நேரு படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். குழந்தைகளை கொண்டாடவேண்டும் என்பதற்காக ஆசிரியப்பெருமக்கள் பாடல், நடனம், நாடகம், வில்லுப்பாட்டு, தமிழ் மற்றும் ஆங்கிலப் பேச்சு ஆகியவற்றை நிகழ்த்தினர். வித்தியாசமான நிகழ்வாக மாணவர்கள் ஆசிரியர்களிடம் கேள்விகளை கேட்கும் “கேள்விக்கென்ன பதில்” மற்றும் “கிளாஸ்ரும் கலாட்டா” என்ற நாடகமும், வில்லுப்பாட்டு நிகழ்ச்சியும் குழந்தைகளை கொண்டாடும் பாடல்களுக்கான நடனங்களும், இசையோடு அமைந்த குழந்தைப் பாடல்களும் கண்டோர் வியக்கும் வண்ணம் அமைந்திருந்தது. பள்ளி முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி பேசும்போது “இன்று குழந்தைகளாகிய உங்களோடு இந்தப் பொழுதைக் கழிக்க எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கின்றது. உங்களுக்காக ஆசிரியப்பெருமக்கள் ‘ஒருநாள் மாணவர்களாக’ தங்களை மாற்றிக்கொண்டு கலைநிகழ்ச்சிகளை அமைத்து உங்களை மகிழ்வித்தார்கள் அவர்களுக்கும் எனது பாராட்டுக்கள். குழந்தைகள் தினத்தை கொண்டாடும் விதமாக இன்று மாலை வீட்டுக்குச் சென்றவுடன் உங்கள் அம்மா அப்பவுக்கு ஒரு முத்தம் கொடுங்கள். அந்த முத்தம் என்பது அப்பாவுக்கும் அம்மாவுக்கும் உங்களுக்கும் உணர்வுப் பகிர்வாக அமைய வேண்டும். தாய்தந்தையருக்கு செலுத்தும் உணர்வுபூர்மான நன்றியாக அந்த முத்தம் அமையவேண்டும் என்று பேசினார்.