- This event has passed.
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. ஏராளமான குழந்தைகள் காந்திவேடமிட்டு வந்திருந்தனர். சிறப்பு விருந்தினராக புதுக்கோட்டை பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கத் தலைவர் ரவிச்சந்திரன் கலந்துகொண்டார்.
விழாவுக்கு தலைமையேற்ற பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி பேசும்போது “இன்றைக்கு நாம் தேசத்தந்தை மாகாத்மாவின் நூற்று ஐம்பதாவது பிறந்த நாளைக் கொண்டாடிக்கொண்டிருக்கின்றோம். காந்திக்கு இந்த சுதந்திர எண்ணத்தை, விடுதலைக்குப் போராடும் குணத்தை உருவாக்கியது தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த தமிழகத்து தில்லையாடி வள்ளியம்மைதான். அவர் புதுக்கோட்டை சாந்தாரம்மன் கோயில் திடல் உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளுக்கு வந்து சென்றிருக்கின்றார். பாரதியோடு கடிதத்தொடர்பில் இருந்திருக்கின்றார். காந்தி வேடமிட்டு குழந்தைகளை அழைத்துவந்த பெற்றோர்களை பாராட்டுகின்றேன். காந்தியை மாதிரியே உங்கள் குழந்தைகள் உண்மையுள்ள, நேர்மையுள்ள, தேசப்பற்றுள்ள குழந்தைகளாக உருவாக்குங்கள். இதுதான் மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாள் விழாவில் நான் பெற்றோர்களுக்குக் கூறுகின்ற நற்செய்தியாகும்” என்று பேசினார்.