Loading Events
  • This event has passed.

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில்
73வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமையேற்றார். சிறப்பு விருந்தினர்களாக ரோட்டரி பாஸ்கர் மற்றும் வரி ஆலோசகர் சி.பிரசாத் ஆகியோர் கலந்துகொண்டனர். ரோட்டரி பாஸ்கர் தேசியக்கொடி ஏற்றிவைத்து சிறப்புரையாற்றினார். அவர் பேசும்போது “உலகத்தின் பணக்காரர்களுக்கெல்லாம் எங்காவது சிலை வைத்திருக்கிறார்களா? மக்களின் மனங்கவர்ந்த தலைவர்களுக்குத்தானே சிலை இருக்கிறது. ஆக மாணவர்களாகிய நீங்கள் பணக்காரர் ஆவதைவிடவும் நல்ல மனசுக்காரர்களாக மாறுங்கள். தேவைப்படுபவர்களுக்கு முடிந்த உதவிகளைச் செய்யுங்கள். ஒரு இரண்டாயிரம் ரூபாய் நோட்டு இருக்கிறது. அதில் ஒருபக்கம் இரண்டாயிரம் என்றும் மறுபக்கம் நூறு ரூபாய் என்றும் தவறுதலாக அச்சிடப்பட்டிருந்தது. அந்த நோட்டு எத்தனை ரூபாயாக மதிக்கப்படும் என்று கேட்டால்
ஒருவர் இரண்டாயிரம் என்றும் மற்றவர்கள் நூறு ரூபாய் என்றும் சொன்னார்கள். உண்மையில் அந்த நோட்டு செல்லாத நோட்டு. அதுபோல மாணவர்கள் திறமையுள்ளவர்களாவும் ஒழுக்கமானவர்களாகவும் இருந்தால் மட்டுமே மதிக்கப்படுவார்கள். நீங்கள் எப்படி இருக்கவேண்டுமென்பதை நீங்களே முடிவுசெய்துகொள்ளுங்கள்.” என்று பேசினார். சிறப்புவிருந்தினர் சி.பிரசாத் மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கி வாழ்த்துரையும் வழங்கினார். பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. நாட்டுப்பற்று மிக்க பாடல்களை மாணவர்கள் பாடினர். பரதம் மற்றும் குழு நடனங்கள் பார்த்தோர் வியக்கும் வண்ணம் அமைந்திருந்தன. விழாவில் நிகழ்த்தப்பட்ட மௌனமொழி நாடகம் தேச ஒருமைப்பாட்டை வலியுறுத்தவதாக அமைந்து அனைவரின் பாராட்டைப் பெற்றது. மேலும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாணவ மாணவிகள் சுதந்திரதின உரையாற்றினார்கள். சுதந்திர தின விழாவின் சிறப்பு நிகழ்வாக பள்ளி முதல்வர் கவிஞர்தங்கம்மூர்த்தி பள்ளியில் மழலை வகுப்புகள் தொடங்கி இன்றைக்கு மேல்நிலை வகுப்புகள்வரை 15 ஆண்டுகள் தொடர்ந்து எங்கள் பள்ளியில் பயிலும் மாணவர்களையும் பெற்றோர்களையும் அழைத்து நினைவுப்பரிசு கொடுத்து கௌரவிக்கபட்டார்கள். இது நெகிழ்ச்சியான நிகழ்வாகும் என்று குறிப்பிட்டார்.