- This event has passed.
இஸ்ரோ விண்வெளி மையம் மற்றும் ஹார்ட்புல்னஸ் இணைந்து நடத்திய இளம்விஞ்ஞானி விருது – 2022 போட்டியில் தமிழக அளவில் சிறந்த கண்டுபிடிப்புக்காக தேர்வு செய்யப்பட்ட ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு மாணவர் யு. ஸ்ரீஹரி இஸ்ரோ விண்வெளி மையம் அமைந்துள்ள மகேந்திரகிரிக்குச் சென்று அம்மையத்தைப் பார்வையிட்டார். மாணவன் ஸ்ரீஹரி இஸ்ரோ விஞ்ஞானிகளோடு கலந்து உரையாடி பல்வேறு கேள்விகளைக் கேட்டு விளக்கம் பெற்றார்.
இஸ்ரோ பயணம் முடித்து பள்ளிக்கு வருகை தந்த மாணவனை பள்ளியின் முதல்வர் தங்கம் மூர்த்தி மற்றும் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் மாலையணிவித்து உற்சாக வரவேற்பளித்தனர். இளம் விஞ்ஞானி ஸ்ரீஹரி இஸ்ரோ விண்வெளி மையத்தில் விஞ்ஞானிகளோடு கலந்துரையாடிய தன் பயண அனுபவத்தை மாணவர்களோடு பகிர்ந்து கொள்ளும் நிகழ்வு பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பள்ளியின் முதல்வர் கலந்து கொண்டு பள்ளியின் இளம் விஞ்ஞானியை வாழ்த்தி “கல்வி பணியோடு மாணவர்களின் அறிவியல் ஆராய்ச்சியிலும் நம் பள்ளி சிறந்து விளங்குவதற்கு மாணவர் ஸ்ரீஹரியின் இஸ்ரோ பயணமே சான்று” என பெருமையோடு கூறினார். இந்நிகழ்வு மாணவர்களுக்கு புதிய உற்சாகத்தையும் தன்னம்பிக்கையும் தரும் நிகழ்வாக அமைந்தது.